கௌதம் மேனன் கதையில் தலையை விட்ட சிம்பு.. VTV-2 படத்திற்கு போட்ட ஸ்கெட்ச்

காதல் படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவர் இயக்குனர் கௌதம் மேனன். அதிலும் இவருடைய இயக்கத்தில் வெளியான காதல் படங்களில் ரசிகர்கள் மிகவும் கொண்டாடப்பட்ட படம் என்றால் அது விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த படம் கடந்த 2010 ஆம் ஆண்டு சிம்பு, திரிஷா நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது.

இதில் சிம்பு- திரிஷாவின் கெமிஸ்ட்ரியும், இசையமைப்பாளர் ஏஆர் ரகுமானின் இசையும் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ரசிகர்கள் தற்போது ஏங்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், அது குறித்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார் கௌதம் மேனன்.

Also Read: திரிஷா அடுத்தடுத்து கமிட்டாகியுள்ள 5 படங்கள்.. 19 வருடத்திற்கு பின் மீண்டும் விஜய்யுடன் குந்தவை

மேலும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் முதல் பாகத்தை எடுக்கும்போதே, 2ம் பாகம் கண்டிப்பாக எடுக்க வேண்டும் என்றே கதையின் ஸ்கிரிப்ட்டை முன்கூட்டியே தயாரித்து வைத்துள்ளார். அதிலும் அந்த கதையில் சிம்புவின் தலையீடு அதிகமாக இருந்திருக்கிறது. ஆனால் அதற்கெல்லாம் கௌதம் மேனன் கொஞ்சம் கூட இடம் கொடுக்கவில்லை.

ஏனென்றால் அந்த அளவிற்கு இரண்டாம் பாகத்திற்காக முன்கூட்டியே பெரிய ஸ்கெட்ச் போட்டு வைத்துள்ளார். முதலில் இந்த படத்தின் கதையைக் கேட்டு விட்டு சிம்பு, ‘தலைவா இந்த படத்தில் கார்த்திக் மற்றும் ஜெசி இருவரும் சேர வேண்டும்’ என்று கௌதம்மேனனிடம் சொல்லி இருக்கிறார். ஆனால் படத்தின் கதையை எழுதும் போதே அவர்கள் இருவரும் சேரக்கூடாது.

Also Read: கௌதம் மேனனின் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த 5 படங்கள்.. சிம்புக்கு வாழ்க்கை கொடுத்த ஒரே படம்

ஏனென்றால் காதல் தோல்வியால் கார்த்திக் தன்னுடைய வாழ்க்கையில் எப்படிப்பட்ட விஷயத்தை செய்து இருக்கிறார் என்பதுதான் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் ஸ்கிரிப்ட். ஆனால் இதற்கு சிம்பு மற்றும் படத்தின் தயாரிப்பாளர் இருவரும் சம்மதிக்கவில்லை. இந்த படத்தில் இருவரும் சேரவில்லை என்றாலும் 2ம் பாகத்தில் இருவரையும் சந்திக்க வைப்பது தான் தன்னுடைய பிளான் என கௌதம் மேனன் போட்டு உடைத்தார்.

இருந்தாலும் சிம்பு மற்றும் படத்தின் தயாரிப்பாளர் இருவரையும் சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காகவே முதல் பாகத்தில், படத்திற்குள் இன்னொரு படம் எடுக்கப்படுவதாக காண்பித்து காதலர்கள் இணைந்தது போல் காட்டினர். ஆனால் கௌதம் எழுதிய ஸ்கிரிப்ட் படி, கடைசிவரை கார்த்திக் மற்றும் ஜெசி இருவரும் சேரவில்லை. இருப்பினும் கதாநாயகன் கார்த்தி எடுத்த ஜெஸ்ஸி என்ற படத்தில் இருவரையும் சேர்த்து வைத்து விடுகின்றனர்.

Also Read: கௌதம் மேனனை அசிங்கப்படுத்திய இளம் இயக்குனர்.. பெரிய மனுஷனாக பதிலடி கொடுத்த சம்பவம்

இந்த விஷயம் எல்லாம் 13 வருடங்களுக்குப் பிறகு ரசிகர்களுக்கு தெரிய வந்த நிலையில், விரைவில் விண்ணைத்தாண்டி வருவாயா 2 படம் உருவாவதற்கான சாத்தியகூறு தென்படுகிறது. இதற்கான அப்டேட்டும் இனி வெளியாகும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்