எந்த நடிகரும் செய்யாத சாதனையை செய்த சிம்பு.. முதல் பெருமையைச் சேர்த்த எஸ் டி ஆர்

சிலம்பரசன் குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பத்து தல, கொரோனா குமார் ஆகிய படங்களில் சிம்பு நடித்து வருகிறார்.

சிம்பு ஒரு பன்முகத்தன்மை கொண்டவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஏனென்றால் அவரது தந்தை போலவே இவருக்கும் சினிமாவில் ஏகப்பட்ட தனித்துவமான திறமைகள் உண்டு. டி ஆர் சினிமாவில் சகலமும் கரைத்துக் குடித்தவர்.

Also Read :விண்ணைத்தாண்டி வருவாயா சிம்புவுக்கான கதை இல்லை.. கௌதம் மேனனை ஒதுக்கிய 2 டாப் ஹீரோக்கள்

இந்நிலையில் சிம்பு பாடல் வரிகள் எழுதுவது, பாடுவது என அனைத்திலும் வல்லவர். தமிழ் சினிமாவில் நிறைய பாடல்களை பாடி உள்ளார். அதேபோல் சமீபத்தில் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு சினிமாவில் வெளியான புல்லட் பாடலை சிம்பு பாடியிருந்தார். இந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பு பெற்றது.

தற்போது சிம்பு பாலிவுட்டிலும் பாடகராக அறிமுகமாகியுள்ளார். இவருடைய வானம் படத்தில் எவண்டி உன்ன பெத்தான் என்ற பாடலை தற்போது ஹிந்தியில் சிம்பு பாடியுள்ளார். சித்ராம் ரமாணி இயக்கத்தில் டபுள் எக்ஸ் எல் என்ற படத்தில் இந்த பாடல் இடம்பெறுகிறது.

Also Read :மொத்தமாய் கழுவி ஊத்தின 5 ரீமேக் படங்கள்.. ஓவர் அலப்பறையில் அடிவாங்கிய சிம்புவின் ஒஸ்தி

இந்த பாடல் ஆரம்பத்தில் தாலி தாலி என்று தொடங்குகிறது. மேலும் இந்த படத்தில் ஹீமா குரோஷி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாலிவுட் சினிமாவில் பாடகராக இந்த படத்தின் மூலம் சிம்பு அறிமுகமாகியுள்ளார். இதற்கு சிம்பு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

மேலும் மிக விரைவில் பாலிவுடிலும் சிம்பு நடிக்க வேண்டும் என்று தங்களது ஆசைகளையும் சிம்பு ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதற்கேற்றார் போல் பாலிவுட் படத்தில் நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இதனால் பாலிவுட்டிலும் சிம்புவின் ஆட்டம் விரைவில் தொடங்க உள்ளது.

Also Read :சிம்புவுடன் கூட்டணி போடும் தனுஷ்.. டைரக்டர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

- Advertisement -