கேஜிஎப் நிறுவனத்துக்கே தண்ணி காட்டிய சிம்பு.. புறா போல் தூது போன மாஸ் இயக்குனர்

சிம்பு இப்பொழுது கமிட்டாகியிருக்கிற படத்தை எல்லாம் முடித்துவிட்டு அடுத்து ஒரு மாஸ் இயக்குனருடன் கூட்டணி வைக்கிறார். இந்த படத்தை கேஜிஎஃப் புகழ் கொம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கவிருக்கிறது. சிம்பு அடுத்து இந்த பிராஜக்ட்டுகாக கூடிய விரைவில் களம் காண இருக்கிறார்.

கொம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சிம்பு கூடிய விரைவில் கால்சீட் கொடுக்க இருக்கிறார். சிம்பு இந்த படம் எப்படியும் நீண்டநாட்கள் எடுப்பார்கள், நம்மளை சக்கை போல் புளிந்து விடுவார்கள் என ஒரு மனக்கணக்கு போட்டு அதற்காக ஒரு பெரும் தொகையை சம்பளமாக கேட்டிருக்கிறார்.

இந்த தொகையை கேட்டு அதிர்ச்சி அடைந்த கொம்பாலே பிலிம்ஸ், இவ்வளவு பணம் கொடுக்க முடியாது. ஆனால் இந்த படத்தில் சிம்புவை தவிர வேறு யாரையும் நடிக்க வைக்க முடியாது என பல யோசனையில் இருந்து வருகிறது.

சிம்பு, காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கேற்ப, மார்க்கெட் கொடிகட்டிப் பறக்கும் போதே சம்பளத்தையும் ஏற்றி விட வேண்டும் என்று ஏற்கனவே ஏற்றிவிட்டார். அது போதாது என்று இந்தப் படத்துக்கு நிறைய நாட்கள் கால்சீட் மற்றும் கடின உழைப்பு இருக்கும் என்று அதை விடவும் இப்போது ஒரு பெரும் தொகையை சம்பளமாக கேட்டுள்ளார்.

இப்பொழுது கொம்பாலே பிலிம்ஸ் இந்த படத்தின் இயக்குனரான சுதா கொங்காராவை, சிம்புவிடம் தூது அனுப்பி இருக்கிறது. சிம்பு இந்த படத்தில் நடிப்பது உறுதி தான், அவரிடம் சென்று கொஞ்சம் சம்பளத்தை குறைத்துக் கொள்ளுமாறு பேசுங்கள் என்று தூது அனுப்பியுள்ளனர்.

இப்பொழுது தூது செல்லும் புறாவாக சுதா கொங்கரா செயல்பட்டு வருகிறார். எப்படியும் சிம்புவிடம் பேசி ஓரளவு சம்பளத்தை குறைப்பார் என்பது உறுதி. இவரைத்தான் மலைபோல் நம்பி இருக்கிறது தயாரிப்பு நிறுவனம்.

Next Story

- Advertisement -