மேடையில் கேட்கப்பட்ட வில்லங்கமான கேள்வி.. கழுவுற மீனில் நழுவுற மீனாக எஸ்கேப் ஆன சிம்பு

சிம்புவின் நடிப்பில் கடைசியாக பத்து தல திரைப்படம் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து அவர் இப்போது உலக நாயகனுடன் கைகோர்த்துள்ளார். தேசிங்கு பெரியசாமி இயக்கும் அந்த திரைப்படம் பிரம்மாண்டமான முறையில் எடுக்கப்பட இருக்கிறது. இந்நிலையில் மேடையில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு சிம்பு அளித்த சாமர்த்தியமான பதில் தான் அனைவரையும் கவர்ந்துள்ளது.

சமீபத்தில் பொன்னியின் செல்வன் 2 படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா விமரிசையாக நடைபெற்றது. அதில் சிம்பு, கமல் உட்பட பல நட்சத்திரங்களும் கலந்து கொண்டனர். அப்போது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிக்பாஸ் ராஜூ சிம்புவிடம் வில்லங்கமான ஒரு கேள்வியை மேடையிலேயே கேட்டார்.

Also read: அடித்து நொறுக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தின் அட்வான்ஸ் புக்கிங்.. வசூல் மட்டும் இத்தனை கோடியா

அதாவது உங்களுடைய ஜெசி இப்போது குந்தவையாக மாறி இருக்கிறார். அதேபோன்று உங்களுக்கு பிடித்த ஐஸ்வர்யா ராயும் நந்தினியாக நடித்திருக்கிறார். இவர்கள் இருவரில் உங்களுக்கு யாரை பிடிக்கும் என்று கேட்டார். உடனே சிம்பு கொஞ்சம் கூட யோசிக்காமல் இரண்டு கண்ணில் எது பிடிக்கும் என்று கேட்டால் எப்படி என கேள்வி எழுப்பினார்.

உடனே ராஜு ஒரு கண்ணை மூடினால் தான் யாராவது வருவாங்க என்று சிரித்தபடியே சொன்னார். அதற்கு சிம்பு எந்த கண்ணை மூட வேண்டும் என்று நான் முடிவு செய்து கொள்கிறேன். நீ கொஞ்சம் பேசாம இரு என்று கழுவற மீனில் நழுவுற மீனாக எஸ்கேப் ஆனார். அவருடைய இந்த பதிலை கேட்டு அங்கு அமர்ந்திருந்த திரிஷா, ஐஸ்வர்யா இருவரும் தங்களை மறந்து சிரித்தனர்.

Also read: விடுதலை பார்ட்-2க்கு பின் மீண்டும் இணையும் வெற்றிமாறன்-சூரி காம்போ.. அதுலயும் ஒரு ட்விஸ்ட் இருக்கு

மேலும் சிம்பு, ஐஸ்வர்யா ராய் குறித்த ஒரு விஷயத்தையும் மேடையில் குறிப்பிட்டார். அதாவது பள்ளி படிக்கும் போது ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்தை வரைந்து தான் முதல் பரிசு பெற்றதாகவும் அவர் கூறினார். உண்மையில் அவரால்தான் அந்த ட்ராயிங் அழகாக மாறியது என்றும் அவர் தெரிவித்தார்.

இவ்வாறு அந்த மேடையில் சிம்பு பல சுவாரஸ்யமான விஷயங்களையும் குறிப்பிட்டு நிகழ்ச்சியை கலகலப்பாக்கினார். அந்த வகையில் இவரை மாட்டி விடும்படியான கேள்வி கேட்கப்பட்டாலும் அவர் அதை நாசுக்காகவே கடந்துவிட்டார். இருப்பினும் ஜெசி தான் ஆல் டைம் பேவரைட் என்ற கருத்தும் இப்போது குவிந்து கொண்டிருக்கிறது.

Also read: இப்போ சிம்பு மொத்தமா இவர் கண்ட்ரோலில் தான்.. பிரியாணி முதல் ஷூட்டிங் வரை சூப்பர் ஸ்டார்க்கு அடிப்போடும் ரகசியம்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்