சிம்புக்கு கடிவாளம் போட்ட புது காதலி.. இனி அம்மணி சொல்றதுதான் நடக்குமாம்

சிம்பு தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை வெற்றிகரமாக ஆரம்பித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். மாநாடு திரைப்பட வெற்றிக்கு பிறகு இவர் தற்போது பத்து தல, கொரோனா குமார் உள்ளிட்ட பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியையும் கலகலப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில் சிம்புவின் புது காதலி நிதி அகர்வால் தற்போது சிம்பு சம்பந்தப்பட்ட அனைத்து வேலைகளையும் கவனித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிம்பு, நிதி அகர்வால் இருவரும் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்தனர். இந்தப் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை என்றாலும் இவர்களுக்குள் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி விட்டது. அதனால் இவர்கள் இருவரும் தற்போது தீவிரமாக காதலித்து வருகின்றனர்.

மேலும் இவர்கள் இருவரும் ஒரே வீட்டில் வசித்து வருவதாக கூட சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. ஆனால் இது குறித்து சம்பந்தப்பட்ட இருவரும் வாய் திறக்காமல் இருக்கின்றனர். இந்நிலையில் தான் சிம்பு குறித்து இப்படி ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

நிதி அகர்வால் இப்போது சிம்புவின் கால்ஷீட் விவகாரம் உட்பட அனைத்தையும் கவனித்து வருகிறார். சிம்பு எப்போது ஷூட்டிங் போக வேண்டும், எந்தப் படத்தில் நடிக்க வேண்டும், யாருக்கு கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பது போன்ற அனைத்து முக்கிய பொறுப்புகளையும் அவர் தான் கவனித்துக் கொள்கிறாராம்.

இந்த விஷயங்களை நிதி அகர்வால் தன்னுடைய மேனேஜர் மூலமாக பார்த்துக் வருகிறார். சிம்புவும் அவர் சொல்படி தான் அனைத்து விஷயங்களையும் செய்து வருகிறாராம். நிதி அகர்வால் சிம்புவை இப்படி கண்ட்ரோல் செய்வது பற்றி தான் தற்போது திரையுலகில் பேசப்பட்டு வருகிறது. மேலும் இந்த காதலாவது சிம்புவுக்கு திருமணத்தில் முடிய வேண்டும் என்ற அவரின் ரசிகர்கள் ஆசைப்படுகின்றனர்.