சிம்புவிற்கு அதிர்ஷ்டம் அடிக்க இதுதான் காரணம்.. இதென்ன புது உருட்டா இருக்கு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. சமீப காலமாக இவரது நடிப்பில் வெளியான படங்கள் எதுவுமே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனால் சிம்புவின் சினிமா வாழ்க்கை இதோடு முடிவுக்கு வரப்போகிறது என பலரும் கூறி வந்தனர். ஆனால் மாநாடு படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.

தற்போது கைவசம் ஆக வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் நடித்ததன் மூலம் இவருக்கு டாக்டர் பட்டம் கிடைத்தது. தொடர்ந்து இவருக்கு வெற்றிகள் கிடைத்து வருவதால் தற்போது மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்.

சமீபகாலமாக சிம்புவின் வளர்ச்சிக்கு அவரது அம்மா வாங்கி கொடுத்த கார்தான் காரணம் என கூறிவருகிறார். அதாவது சிம்புவின் பிறந்த நாளன்று அவரது அம்மா உயர்ரக மினி கூப்பர் கார் வாங்கிக் கொடுத்தார். மேலும் எங்கு சென்றாலும் சிம்பு இந்த மினி கூப்பர் கார் தான் பயன்படுத்தி வந்தார்.

தற்போது மினி கூப்பர் கார் வந்த பிறகுதான் மாநாடு படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதாகவும் அதுமட்டுமில்லாமல் தற்போது சம்பளம் கூட 20 கோடி உயர்ந்ததற்கு இந்த கார்தான் காரணம் என அவரது நண்பர்களிடம் கூறி வருகிறாராம்.

அதனால் சிம்பு இந்த மினி கூப்பர் கார் மீது அதிக பாசம் வைத்துள்ளதாகவும் இனிவரும் காலங்களில் எத்தனை கார் வாங்கினால் இந்த கார் அவர் யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டார் எனவும் கூறி வருகின்றனர். மேலும் தற்போது சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு படம் இன்னும் ஒரு வாரம் மட்டுமே படப்பிடிப்பு இருக்கிறது.

கூடிய விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து படத்திற்கான அப்டேட் வெளியிடப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. அதனால் தற்போது சிம்பு தான் நடிக்கும் படங்களின் மீது அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் வித்தியாசமான கதைகளில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருவதாகவும் சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்