மணிரத்தினத்திற்கு சிம்பு வச்ச செக்.. பல வருடங்களுக்குப் பின் STR எடுத்த முடிவு

Simbu: முன்வினை செய்த பாவம் எப்பொழுதுமே தொடர்ந்து கொண்டே வரும் என்று சொல்வார்கள். அது யாருக்கு பொருந்துதோ இல்லையோ சிம்புவுக்கு நன்றாகவே பொருந்துகிறது. பின்னாடி என்ன நடக்கும் என்று எந்தவித முன் யோசனையும் இல்லாமல் ஓவராக ஆட்டம் போட்ட சிம்புவுக்கு தற்போது எல்லாம் இறங்கு முகமாகத் தான் இருக்கிறது.

அதாவது படப்பிடிப்புக்கு சரியாக போகாமல், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை மதிக்காமல் சூட்டிங் நேரத்தில் ரொம்பவே அசால்ட்டாக இருப்பார் என்று சிம்பு மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கிறது. அதனால் தான் இவர் நடித்த முக்கால்வாசி படம் பெய்லியர் ஆகி வணிக ரீதியாக தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்திருக்கிறது.

பிரச்சினையை முடிக்க சிம்பு எடுத்த முடிவு

அப்படித்தான் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை எடுத்த மைக்கேல் ராயப்பனுக்கும் சிம்புவுக்கும் பிரச்சினை இருந்தது. அதாவது சிம்பு ஒழுங்கா படப்பிடிப்புக்கு வராததால் தான் நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது. அதனால் அந்த நஷ்டத்தை சிம்பு தான் ஈடு செய்ய வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இவரை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு என்ற படத்தை எடுத்து ஐசாரி கணேசுக்கும் சிம்புவுக்கும் பண விஷயத்தில் பிரச்சனை ஏற்பட்டது. அவருக்கும் சிம்பு பணம் கொடுப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அதையெல்லாம் மறந்து மணிரத்தினம் இயக்கும் தக் லைஃப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்.

இந்த நேரத்தில் சிம்புவை லாக் பண்ணினால்தான் நஷ்டப்பட்ட பணத்தை ஈடு செய்ய முடியும் என்று இரண்டு தயாரிப்பாளர்களும் மணிரத்தினத்திற்கு ஒரு செக் வைத்து விட்டார்கள். அதாவது சிம்பு எங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுத்தால் மட்டும்தான் உங்களுடைய படத்தில் நடிக்க முடியும். இல்லையென்றால் நடிக்க விடமாட்டோம் என்று பிரச்சனை செய்திருக்கிறார்கள்.

இதனால் எந்த வித பதிலும் சொல்ல முடியாமல் மணிரத்தினம் நைசாக கழண்டுவிட்டார். ஆனால் சிம்பு இந்த பிரச்சினையை இதோட முடித்தாக வேண்டும் என்று அவர் கை காசை போட்டு பஞ்சாயத்தை முடித்து விடலாம் என்று நினைத்திருக்கிறார். இனியாவது ஓவராக ஆட்டம் போடாமல் நடிப்பில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்