நயனை விடாமல் துரத்தும் சிம்பு, நம்பர் சென்டிமென்ட்டா.? நயன் சென்டிமென்ட்டா.? என்ற குழப்பத்தில் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல சறுக்கல்களில் சிக்கி, தற்போது மாசாக ரீ- என்ட்ரி கொடுத்திருப்பவர் தான் சிம்பு. என்னதான் பல சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும், அவருடைய ரசிகர்களின் எண்ணிக்கை இன்று வரை குறையாமல் தான் உள்ளது.

இதனால்தான் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஈஸ்வரன் திரைப்படம் மாபெரும் ஹிட்டானது. இந்த நிலையில் சிம்பு படங்களில் எல்லாம் எண் 9 அதிக அளவில் இடம் பெறுவதோடு, முக்கிய பங்காற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.

அதாவது நடிகர் சிம்புவும் நயன்தாராவும் காதலித்தது முதல் பிரேக்கப் செய்துகொண்டது வரை உள்ள அனைத்து கதையும் நமக்கு தெரியும். அதற்குப் பிறகு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து சிம்புவும் நயன்தாராவும் இணைந்து ‘இது நம்ம ஆளு’ படத்தில் நடித்தனர்.

இவ்வாறிருக்க, சிம்பு தனது படங்களில் தொடர்ந்து எண் ஒன்பது சென்டிமென்ட் வைத்து வருவதாக பரவலாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பில் முக்கிய பங்காற்றிய எண் 9, தொடர்ந்து மாநாடு படத்தின் டீஸர் வரை வந்துள்ளது.  அந்த வகையில்தான் மாநாடு படத்தின் டீஸர் நேற்று 2. 34 மணிக்கு வெளியானதாம்.

அதுமட்டுமில்லாமல் மாநாடு படத்தின் ரீவைண்ட் டீசரில் காலம் குறித்து சிம்பு பேசியதைத் தொடர்ந்து, அவரது கை காட்டும் இடத்திற்கு பின் உள்ள கடிகாரத்தில் நம்பர் நயனை காட்டியுள்ளார் சிம்பு.

இவ்வாறு மாநாடு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ், டீஸர் ரிலீஸ் என எல்லாவற்றிலும் நம்பர் 9 இடம் பெற்றிருப்பதை பார்த்த ரசிகர்கள் அனைவரும், சிம்பு நம்பர் சென்டிமென்டல் இதை செய்கிறாரா? இல்ல நயன் சென்டிமென்டல் இதை செய்கிறாரா? என்ற குழப்பத்தில் உள்ளனராம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்