ஆளே டோட்டலா மாறி பாங்காங்கில் இருந்து சென்னை வந்த சிம்பு.. நீண்ட முடியுடன் கெத்தாக வந்த புகைப்படம்

மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்களில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்து ரீ என்ட்ரியை துவங்கிய சிம்பு, அடுத்ததாக பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார். வரும் மார்ச் 30ஆம் தேதி ரிலீசாக இருக்கும் இந்த படத்தின் ஆடியோ லான்ச்காக தற்போது பாங்காங்கில் இருந்து சென்னை திரும்பி உள்ளார்.

அடுத்ததாக உலகநாயகன் கமலஹாசன் தயாரிக்கும் எஸ்டிஆர் 48 படத்திற்காக தாய்லாந்தில் தங்கி, மூன்று மாதங்களாக மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையை கற்று வந்தார். இந்தப் படத்தை 100 கோடி பட்ஜெட்டில் சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், கமலஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது.

Also Read: மறுபடியும் வேதாளம் முருங்க மரம் ஏறுது.. மொத்த படக் குழுவையும் பரிதவிக்க விட்ட சிம்பு

இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் ஷூட்டிங் துவங்க படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தற்போது பத்து தல படத்தின் ஆடியோ லான்ச்காக பாங்காங்கில் இருந்து சென்னை திரும்பி உள்ளார்.

சிம்பு நியூ லுக்

simbu-new-look-3-cinemapettai
simbu-new-look-3-cinemapettai

3 மாதத்திற்கு பிறகு இப்போது ஆளே டோட்டலா மாறி இருக்கும் சிம்புவின் நியூ லுக் புகைப்படம் சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகிக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு பத்து தல படத்திற்காக நீண்ட தாடியுடன் காணப்பட்ட சிம்பு இப்போது தாடியை நீக்கி விட்டு, நீண்ட முடியுடன் ஹான்சம் லுக்கில் கெத்தாக இருக்கிறார்.

நீண்ட முடியுடன் கெத்தா இருக்கும் சிம்பு

sinbu-new-look-1-cinemapettai
simbu-new-look-1-cinemapettai

Also Read: அந்த ரெண்டு படத்தையும் தூக்கி போடுங்க, அதிரடி முடிவெடுத்த சிம்பு.. தலையை பிச்சுக்கிட்டு திரியும் இயக்குனர்

இவரைப் பார்க்கும்போது சிம்பு நடிப்பில் 2008 ஆம் ஆண்டு வெளியான காளை படத்தில் வந்த எஸ்டிஆர் போலவே தெரிகிறது. இந்த அளவிற்கு இதற்கு முன்பு சிம்புவை அழகாக பார்த்ததில்லை என்றும் ரசிகைகள் இந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கின்றனர்.

ஹான்சம் லுக்கில் கெத்தாக இருக்கும் சிம்பு

simbu-new-look-2-cinemapettai
simbu-new-look-2-cinemapettai
- Advertisement -