படத்துல சான்ஸே இல்ல, பிக்பாஸில் வாய்ப்பு வாங்கிய கொடுத்த சிம்பு.. விஷ பாட்டிலுக்கு அடிச்ச லக்

விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன்5 தொடங்கி பிரம்மாண்டமாக நான்கு வாரங்களை எட்டிப்பிடிக்க உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக கேமை விருப்புடன் பிக்பாஸ் வீட்டில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி, குசுகுசுன்னு நாசுக்கா பேசுபவர் பாவனி ரெட்டி. இவர் வந்த முதல் வாரத்தில் எல்லாம் அமைதியாக இருந்து நாமினேஷனில் இருந்து தப்பித்து விட்டார்.

ஆனால் இந்த ஒரு வாரமாக தான் இவரின் சுயரூபமே கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருகிறது. இவருடன் கூட்டணி வைத்திருக்கும் சுருதிக்கு காயின் டாஸ்க்கில் உதவி, தாமரை அக்காவின் காயினையும் எடுத்து கெட்ட பெயரையும் சம்பாதித்து விட்டார் குசுகுசு பாவனி.

ஏனெனில் இது ஒரு கேம் என்றாலும் ஒரு இடம், பொருள், ஏவல் என ஒரு வரைமுறை இருக்கிறது அல்லவா. இவ்வாறு பாவனி பிக்பாஸ் வீட்டில் ஒரு பாய்சன் ஆகவே மாறி மற்றவர்களின் வெறுப்பையும் மக்களின் வெறுப்பையும் சம்பாதித்து வருகிறார்.

bhavani-cinemapettai
bhbhavani-cinemapettaiavani-cinemapettai

பாவனி ரெட்டி விஜய் டிவியின் ரெட்டை வால் குருவி மற்றும் சின்னத்தம்பி மூலம் பிரபலமானவர். இவர் பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் திடீரென பிரதீப் தற்கொலை செய்துகொள்ள மன இறுக்கத்திலிருந்த பாவனி, ஆனந்தராய் என்பவருடன் லிவிங்டுகெதரில் இருந்து வந்தார்.

இந்த ஆனந்தராய் என்பவர் நடிகர் சிம்புவுக்கு மிகவும் வேண்டியவராக இருந்து வருகிறார். படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டு உள்ளார். எனவே சிம்பு தன் திரையுலக செல்வாக்கை பயன்படுத்தி பிக்பாஸில் பாவனிக்கு இந்த வாய்ப்பை வாங்கிக் கொடுத்து உள்ளார் என்ற தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.