வரலாற்றுப் படத்தை மிஞ்சும் அளவிற்கு எஸ் டி ஆரின் 48 வது படம்.. 100 கோடி பட்ஜெட்டுடன் களமிறங்கிய கமல்

சிம்புவின் பத்து தல படத்திற்கு பிறகு இவருடைய அடுத்த படமான 48வது படத்திற்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டார்.  தற்போது சோசியல் மீடியாவில் இதை பற்றி தான் பேச்சு அடிபட்டு வருகிறது. அதாவது இப்படத்தை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க இருக்கிறார். இவர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தை இயக்கியவர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவருடைய அடுத்த படத்திற்கு சிம்புவை புக் பண்ணிவிட்டார்.

அடுத்ததாக இப்படத்தை கமலஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பின் மூலம் தயாரிக்க இருக்கிறார். இதுகுறித்து இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள். அத்துடன் இது மிகப் பெரிய வரலாற்று படமாக கண்டிப்பாக அமையும். அதை நோக்கி தான் இயக்குனர் பயணித்து வருகிறார் என்று சொல்லி இருக்கிறார்.

Also read: சிம்புவுக்கு ஜோடியான வாரிசு நடிகை.. பக்கா காம்பினேஷனில் தயாராகும் படம்

அது மட்டும் அல்லாமல் இப்படத்தை எல்லா வயதினரும் பார்த்து ரசிக்கும் படியான ஒரு பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும். மேலும் இதுவரை சிம்புவை பார்க்காத கோணத்தில் புதிய பரிமாணத்தில் இப்படத்தின் மூலம் பார்க்கலாம். இப்படத்தில் ஆக்ஷனுக்கும் எந்தவித பஞ்சமும் இருக்காது என்று கூறியிருக்கிறார்கள்.

அத்துடன் இப்படத்தை 100 கோடி பட்ஜெட்டுடன் தயாரிக்க இருக்கிறோம். அதனால் ஒவ்வொரு வேலைகளையும் பார்த்து பார்த்து தான் மெதுவாக தொடங்க போறோம்.  இப்படத்திற்கான ஃப்ரீ ப்ரோடுக்ஷன் வேலைகள் ஆரம்பிப்பதற்கு கொஞ்சம் நாட்கள் ஆகும் என்று ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்திருக்கிறார்.

Also read: சிம்புவை கை தூக்கிவிடும் ஆண்டவர்.. வளர்ச்சியை தாங்க முடியாமல் கெடுக்கும் சோழர்கள்

மேலும் இப்படத்திற்கான படப்பிடிப்பு வேலைகள் அனைத்தையும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப் போகிறோம். அதற்கு முன் ஏற்பாடாக தான் சிம்பு லண்டனுக்கு சென்று பல பயிற்சிகளும் மேற்கொண்டு உள்ளார். அத்துடன் சிம்புவுக்கு இப்படம் சினிமா கேரியரில் மிக முக்கியமான மைல்கல் படமாக அமையும் என்பதில் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார்.

இந்நிலையில் இன்று எஸ்டிஆர், கமல் மற்றும் தேசிங்கு பெரியசாமி இவர்கள் மூன்று பேரும் சந்தித்து அதற்கான புகைப்படங்களை எடுத்து இணையதளத்தில் வெளியிட்டு உறுதி செய்து விட்டார்கள். தற்போது இந்த புகைப்படம் நாலா பக்கமும் பரவி வருகிறது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் மிகவும் ஆரவாரத்துடன் ஒவ்வொரு அப்டேட்டுக்கும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Also read: ரகசியத்தை போட்டு உடைத்த சிம்பு.. தளபதி-68 உறுதியாகும் நேரத்தில் வெங்கட் பிரபுவுக்கு வைத்த சூனியம்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை