சிம்புவுடன் கூட்டணி போடும் தனுஷ்.. டைரக்டர் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க!

சினிமாவை பொறுத்தவரையில் ஒவ்வொரு காலத்திலும் இரு நடிகர்கள் இடையே போட்டி நிலவி வருவதை நாம் பார்த்து வருகிறோம். அந்த வகையில் தற்போது உள்ள சூழ்நிலையில் சிம்பு மற்றும் தனுஷ் ரசிகர்களில் இடையே கடுமையான போட்டி வருகிறது.

அதாவது சிம்பு குழந்தை நட்சத்திரமாகவே தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனாலும் அவர் ஹீரோவாக நடிக்க வந்த போது தான் தனுஷும் அறிமுகமாகி பல படங்களில் நடிக்க தொடங்கியிருந்தார். அதுமட்டுமின்றி தனுஷ் மற்றும் சிம்பு இருவருமே பல திறமைகளை கொண்டவர்கள்.

Also Read :கோப்ரா படத்தைப் பார்த்து ஜெர்க் ஆகும் நடிகர்கள்.. பலத்த யோசனையில் சிம்பு

அதாவது பாடகர், பாடலாசிரியர் என சினிமாவில் பல பரிமாணங்களை கொண்டுள்ளார்கள். ஆனால் இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை ஒரு படத்தில் கூட நடித்ததில்லை. இப்போது விரைவில் சிம்பு, தனுஷ் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதைக் கேட்ட ரசிகர்கள் மகிழ்ச்சி கடலில் ஆழ்ந்துள்ளனர்.

மேலும் இப்படத்தை தனுஷ் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. சிம்பு மற்றும் தனுஷ் இருவருமே வசனம் மற்றும் திரைக்கதையில் கவனம் செலுத்த உள்ளனர். யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தனுஷ் மற்றும் சிம்புக்கு யுவன் நிறைய ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

Also Read :திரும்பத் திரும்ப மல்லுக்கட்டும் சிம்பு-தனுஷ்.. ஒரே போடாய் எஸ்டிஆர் கையில் எடுக்கும் புது ஆயுதம்

இந்நிலையில் முதல் முறையாக சிம்பு, தனுஷ், யுவன் கூட்டணியில் ஒரு படம் உருவாக உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆனால் இது குறித்து உறுதி பட தகவல் இன்னும் வெளியாகவில்லை. மேலும் தனுஷ் தற்போது வாத்தி மற்றும் கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இதில் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி உள்ள வாத்தி படம் விரைவில் வெளியாக உள்ளது. மேலும் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான வெந்து தணிந்தது காடு படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்ற நிலையில் பத்து தல படத்தில் நடித்து வருகிறார்.

Also Read :பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டும் விஷால்.. சிம்புவிற்கு இழைக்கப்பட்ட அநீதி

- Advertisement -