தொந்தியும் தொப்பையுமாக இருந்த சிம்புவை கழட்டிவிட்ட நிறுவனம்.. அடுத்த சில நாளில் நடந்த மாற்றம்

சிம்பு வாலு படத்தில் நடிக்கும் போது ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் நடிப்பது ஆக இருந்தது. ஆனால் அதன் பிறகு சிம்பு தொடர்ந்து சூட்டிங் ஸ்பாட்டுக்கு சரியாக வருவதில்லை மற்றும் உடல் எடை கூடி நடிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்தால் இதனை பார்த்த ஏஜிஎஸ் நிறுவனம் இப்போது இருக்கும் சிம்புவை வைத்து படம் தயாரிக்காமல் இருந்துள்ளனர்.

மேலும் சிம்பு நடிப்பில் ஆர்வம் இல்லாததால் அவர்கள் சொல்வது போல் நடிக்காமல் இருந்தார். ஆனால் சமீபத்தில் வெளியான மாநாடு திரைப்படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. சிம்புவிற்கு தற்போது படங்களில் நடிப்பதற்கான ஆர்வம் அதிகரித்துள்ளது.

இதனை பார்த்த ஏஜிஎஸ் நிறுவனம் தற்போது சிம்புவை வைத்து படத்தை தயாரிக்க திட்டமிட்டுள்ளனர். சிம்புவிடம் ‘ஓ மை கடவுளே’ படத்தின் இயக்குனர் ஒரு கதையை கூறியுள்ளார். அது சிம்புவிற்கு பிடித்துள்ளது.

அதனால் கூடிய விரைவில் சிம்புவின் நடிப்பில் ஏஜிஎஸ் நிறுவனம் ஒரு புதிய படத்தை தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் சிம்புவுடன் இருந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து உள்ளன. அதனால் சிம்புவை வைத்து படம் தயாரித்தால் எந்த ஒரு பிரச்சனையும் வராது என்பதற்காகத்தான் தற்போது ஏஜிஎஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது தொடர்ந்து பத்து தல, கொரோனா குமார் மற்றும் வெந்து தணிந்தது காடு படங்களில் நடித்து வருகிறார். அதனால் கூடிய விரைவில் சிம்புவின் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளிவர உள்ளதால் சிம்பு ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருந்தனர்.

தற்போது அவர்களுக்கு மீண்டும் இன்னொரு மகிழ்ச்சியாக ஏஜஸ் நிறுவனத்துடன் கை கோர்த்து உள்ளதால் கண்டிப்பாக இப்படம் பெரிய அளவில் சிம்புவிற்கு வரவேற்பைப் பெற்றுத் தரும் என கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை