மாநாடு சக்சஸ் பார்ட்டி எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதுல கோட்டை விட்டுட்டீங்களே சிம்பு

கோலிவுட்டில் வம்பு நடிகர் என்றால் அது சிம்பு தான். இவர் இடங்களில் பிரச்சனை வருகிறதா இல்லை பிரச்சனை இருக்கும் இடத்திற்கு இவர் செல்கிறார் என்று தெரியாது. ஆனால் சிம்பு என்றாலே பிரச்சனை எனும் அளவிற்கு ஏகப்பட்ட சர்ச்சைகள் மற்றும் பஞ்சாயத்துகளில் சிக்கியுள்ளார் சிம்பு. ஒரு கட்டத்தில் சர்ச்சை காரணமாக சில காலம் சினிமாவில் இருந்தே விலகி இருந்தார்.

அந்த சமயத்தில் மனுஷன் ஓவர் வெயிட் போட்டு ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். சிம்புவா இது என அவரின் ரசிகர்களே அதிர்ச்சி அடையும் அளவிற்கு சிம்பு காணப்பட்டார். பின்னர் கடினமாக உடற்பயிற்சி செய்து ஓரளவிற்கு உடல் எடையை குறைத்து நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஈஸ்வரன் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

அந்த படம் ஒன்று அந்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெங்கட் பிரபு சிம்பு கூட்டணியில் உருவான மாநாடு படம் வெளியானது. கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பிறகு சிம்புவிற்கு இப்படம் வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு மாநாடு படம் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது.

பலரும் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள். படத்தில் எல்லாமே ஓகே. ஓவர் ஆல் படம் பார்ப்பதற்கு பக்காவாக உள்ளது. ஆனால் ஒன்று மட்டும் தான் ஒட்டுமொத்த படத்தையும் சொதப்புகிறது என சிலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அது வேறு ஒன்றுமல்ல படத்தின் சிஜி பணியில் சற்று சொதப்பியுள்ளார்கள்.

maanaadu
maanaadu

அதாவது மாநாடு படம் வேண்டுமானால் சமீபத்தில் வெளியாகி இருக்கலாம். ஆனால் படத்தின் படப்பிடிப்பு 2018ஆம் ஆண்டே தொடங்கி விட்டது. அந்த சமயத்தில் சிம்பு வெயிட் போட்டிருந்ததால், படத்தின் முதல் பாதியில் குண்டாக தெரிவாராம். இதனால் அதை மறைக்க சிஜி பணி மூலம் சிம்புவை ஒல்லியாக காட்டி உள்ளார்கள். இருப்பினும் படத்தின் முதல் பாதியில் இது அப்படியே அப்பட்டமாக தெரிகிறதாம்.

maanaadu
maanaadu

இரண்டாம் பாதியில் கெத்தாக தோன்றும் சிம்புவிற்கும் முதல் பாதியில் வரும் சிம்புவிற்கும் ஏகப்பட்ட வித்தியாசம் உள்ளதாம். படத்தை பயங்கரமாக எடுத்துவிட்டு சிஜி பணியில் போய் சொதப்பி விட்டார்களே என ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்