கௌதம் வாசுதேவ மேனன் படத்தில் நடிக்கும் சிம்பு.. படத்திற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வரும் சிம்புவின் நடிப்பில் அடுத்ததாக மாநாடு படம் திரைக்கு வர உள்ளது. வெங்கட்பிரபு இயக்கியுள்ள இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முடிந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இதனை தொடர்ந்து ஜில்லுனு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நதிகளிலே நீராடும் சூரியன் ஆகிய படங்களில் நடிக்க சிம்பு ஒப்பந்தமாகியுள்ளார்.

கௌதம் மேனன் இயக்கும் படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருப்பதாகவும், இதற்காக 10 கோடிக்கும் அதிகமாக சிம்புவிற்கு சம்பளம் வழங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பல நாயகிகளுடன் காதல் கிசுகிசு, அடுத்தடுத்து படங்கள் தோல்வி, படப்பிடிப்பிற்கு தாமதமாக வருவது போன்ற பல சர்ச்சைகளில் சிக்கி இருந்த சிம்பு, சமீப காலமாக படங்களில் நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது தனது உடல் எடையை முழுமையாக குறைத்து நியூ லுக்கில் வலம் வருகிறார். இந்த மாற்றத்திற்குப் பிறகு சிம்புவின் மார்க்கெட் மட்டுமல்லாமல் சம்பளமும் உயர்ந்துள்ளது.

simbu gautham vasudev menon
simbu gautham vasudev menon

இருந்தாலும் ஒரு மாதத்திற்கு 5 கோடி வீதம் இரண்டு மாதத்திற்கு 10 கோடி என்பதெல்லாம் கொஞ்சம் ஓவர் தான் என்பது போல் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

- Advertisement -