சிம்பு வாலை சுருட்டிகிட்டு இருந்தால் நல்லது.. எச்சரிக்கும் பிரபலம்

தமிழ் சினிமாவில் இந்த நடிகர்களின் நன்றாக வரவேண்டும் என எதிர்பார்த்து காத்திருந்த நடிகர்கள் லிஸ்டில் முதலிடத்தில் இருந்தவர் சிம்புதான். கடைசியாக 2010-ம் ஆண்டு விண்ணைத்தாண்டி வருவாயா என்ற வெற்றிப் படத்தைக் கொடுத்து இருந்தார்.

அதன்பிறகு சரியாக படம் நடிக்காமல் இருந்த சிம்புவுக்கு நடித்த படங்களும் சரியாக அமையவில்லை. அதுவும் அன்பானவன் அடங்காதவன் அசராதவன் என்ற படம் எல்லாம் சிம்பு இனிமேல் சினிமாவில் நடிக்க லாயக்கு இல்லை எனும் அளவுக்கு படுதோல்வியை சந்தித்தது.

அதுமட்டுமில்லாமல் அந்த படத்தின் தயாரிப்பாளருக்கும் சிம்புவுக்கும் ஏகப்பட்ட மோதல்கள் வந்ததால் சிம்புவுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் தடுமாறி வந்தார். அதன் பிறகு உடல் எடை கூடி பார்க்கவே மோசமாக இருந்த சிம்பு மீண்டும் உடல் எடையை குறைத்து பழைய நிலைமைக்கு வந்து விட்டார்.

கடைசியாக வெளியான சிம்புவின் மாநாடு திரைப்படம் வெற்றிப்படமாக மட்டுமில்லாமல் சிம்புவின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படம் அவருக்கு மிகப் பெரிய வியாபாரத்தை ஏற்படுத்திக் கொடுத்த படமாகவும் மாறியுள்ளது.

இதனால் இனிமேல் சிம்பு தமிழ் சினிமாவில் இதுவரை செய்த சேட்டைகளை எல்லாம் செய்யாமல் ஒழுங்காக தன்னுடைய வாலை சுருட்டி வைத்துக் கொண்டு தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தால் கண்டிப்பாக விஜய் அஜித்துக்கு வர வாய்ப்பிருக்கிறது என சினிமா பிரபலமும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்தில் ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.

simbu-str
simbu-str
Sharing Is Caring:

அதிகம் படித்தவை