80-களில் சில்க் சுமிதாவிற்கு அங்கீகாரம் கொடுத்த ஹிட் படங்கள்.. கதாபாத்திரமாகவே வாழ்ந்தார்.!

சில்க் ஸ்மிதா தனது கவர்ச்சியான நடிப்பின் மூலம் 80காலகட்ட இளைஞர்களை திக்குமுக்காட செய்தவர். சில்க்கின் நடனம் இல்லாத பெரிய நடிகர்களின் திரைப்படங்களே இல்லை எனும் அளவுக்கு பிரபலமானவர்.

அவருடைய கவர்ச்சி பாடலுக்காகவே ஹிட்டடித்த படங்களும் உண்டு. சில்க் என்றால் வெறும் கவர்ச்சி மட்டும் தான் என்று பலரும் நினைத்தனர். அதை பொய்யாக்கும் வகையில் தமிழ் திரைப் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தார்.

அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தில் ராதாவின் அண்ணியாக இவர் நடித்து இருப்பார். இந்தப் படத்தில் இவருடைய நடிப்பு மிகப்பெரிய பாராட்டை பெற்றது. இதைத் தவிர கோழி கூவுது, மூன்றாம் பிறை, நீங்கள் கேட்டவை போன்ற படங்களில் தன் திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

மேலும் லயனம் என்ற திரைப்படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் இவரை மற்றொரு பரிமாணத்தில் காட்டியது. இப்படம் பல மொழிகளில்  டப் செய்யப்பட்டு  வெளியிடப்பட்டது.

இத்திரைப்படங்கள் அவருக்கு நடிப்பிற்கான அங்கீகாரத்தை பெற்றுத்தந்தது. நடனம் தவிர நடிப்பிலும் தன் திறமையை நிரூபித்த இவர் 1996 ஆம் ஆண்டு தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இந்த செய்தியை கேட்டு ஒட்டுமொத்த திரையுலகமே ஸ்தம்பித்தது.

silk-smitha

2011ஆம் ஆண்டு அவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து டர்ட்டி பிக்சர்ஸ் என்ற திரைப்படம் எடுக்கப்பட்டது.  இதில் நடிகை வித்யாபாலன் நடித்து சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார். மரணத்தை தாண்டியும் மக்கள் மனதில் என்றும் வாழ்பவர் சில்க் என்பதற்கு இதுவே உதாரணம்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்