சத்யராஜ் உடன் டான்ஸ் ஆட மறுத்த சில்க் ஸ்மிதா.. காரணம் தெரிஞ்சா நீங்களே ஷாக் ஆயிடுவீங்க

கவர்ச்சி நடிகைகள் மத்தியில் மிகவும் வித்தியாசமானவர் நடிகை சில்க் ஸ்மிதா. படப்பிடிப்பு முடிந்தவுடன் பத்து நிமிடங்கள் மட்டுமே காத்திருப்பாராம் பின்பு, ஒரு நொடியும் தாமதிக்காமல் அங்கு இருந்து சென்றுவிடுவார். சினிமாவில் கவர்ச்சியாக நடித்தாலும் மிகவும் கோவக்காராம் சில்க்.

சட்டத்தை திருத்துங்கள் படத்தில் மோகன், நளினி ஜோடியாக நடித்த படத்தில், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ் நடித்தார். அப்பொழுது சிலுக்குடன் நடன காட்சி படம் பிடிக்கப்பட்டது. அதுவரை அடியாளகவே நடித்து வந்த சத்யராஜ் முதன் முதலாக சிலுக்கோட ஒரு பாடலுக்கு ஆட ராம நாராயணன் வாய்ப்பளித்தார். சத்யராஜுக்கு அது முதல் டான்ஸ் என்பதனாலும் சிலுக்கு உடன் ஆடுகிறோம் என்பதனாலும் ஆர்வக்கோளாறில் சிலுக்கின் மேல் அவரது கால்பட்டு விட்டது. உடனே சில்க் ஆட்டத்தை நிறுத்தி நாற்காலியில் வந்து அமர்ந்துவிட்டார்.

டான்ஸ் மாஸ்டர் என்னங்க அம்மா ஆச்சு என்று கேட்டவுடன் அந்த ஆளோட நான் டான்ஸ் ஆட மாட்டேன் என் காலை மிதித்துவிட்டான் என்றார் சிலுக். அதற்கு டான்ஸ் மாஸ்டர், சிலுக்குயிடம் அம்மா தப்பா நினைச்சுக்காதீங்க உங்கள மாதிரி பெரிய டான்சர் இல்ல அவர் இப்பதான் டான்ஸ் கத்துகிறார். கொஞ்சம் தயவு பண்ணுங்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டனர்.

அன்று சத்யராஜுக்கு அதிர்ஷ்டமான நாள் என்று தான் கூற வேண்டும் கோபம் வந்தாள் உடனே செட்டை விட்டு வெளியே சென்றுவிடுவார். ஆனால் சில்க் மீண்டும் வந்து சத்யராஜுடன் அந்த பாடலுக்கு நடனமாடினார்.

எஸ் ஏ சந்திரசேகர் அவர்கள் சில்க் ஸ்மிதா, விஜயகாந்துக்கு ஜோடியாக பட்டணத்து ராஜாக்கள் படத்தில் வாய்ப்பளித்தார். இவர் வீட்டுக்கு ஒரு கண்ணகி என்ற படத்தை இயக்கியிருந்தார். இதில் சந்திரசேகர், விஜயகாந்த், நளினி, ஜெய்சங்கர், சுஜாதா, ரவீந்தர் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து கொண்டிருந்தார். இத்திரைப்படத்தில் சிலுக்கை நடிக்க கேட்ட பொழுது அவருக்கு ஜோடியாக நடிக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். அதிக சம்பளம் தருவேன் என்று கூறியும் சில்க் அதை மறுத்து விட்டாராம்.

அதற்கு காரணம் வாழ்க்கை திரைப்படத்தில் அவருக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவம். அத்திரைப்படத்தில் அவரை வேண்டுமென்றே ரவீந்தர் கீழே போட்டுவிட்டாராம். அதனால் அந்த திரைப்படத்தில் நடிக்க சிலுக்கு மறுத்துவிட்டார். ரவீந்தருக்கு சிலுக்கும் மோதல் ஏற்பட்டதாக சினிமா பத்திரிகைகளில் எழுதப்பட்டது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்