டேய் அஜித் சார்னு கூப்பிடு என எச்சரித்த ரசிகர்.. நக்கலாக ஒரே வார்த்தையில் சோலியை முடித்த சித்தார்த்

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தல அஜித். பல தோல்விப் படங்களைக் கொடுத்திருந்தாலும் தற்போது வரை அவரது ரசிகர்கள் அவரை விட்டு விலகாமல் அவருக்கு சப்போர்ட் செய்து வந்ததால் சமீபகாலமாக தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம் போன்ற படங்கள் நூறு கோடிகளுக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில் அடுத்த வசூல் சாதனைக்கு ரெடியாக இருக்கும் திரைப்படம் வலிமை.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித் வினோத் கூட்டணியில் உருவான இரண்டாவது திரைப்படம். இறுதிகட்ட படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் வலிமை படக்குழுவினர் ஸ்பெயின் நாட்டு உரிமைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையில் வலிமை படத்தின் டப்பிங் மற்றும் எடிட்டிங் ஆகியவற்றை எடுத்தவரை முடித்து வைத்து விட்டார்களாம். அதுமட்டுமில்லாமல் வருகிற மே 1ம் தேதி அஜீத் பிறந்தநாளை முன்னிட்டு வரும் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித் மீதுள்ள மரியாதையால் ரசிகர்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் தல அஜித்திற்கு மரியாதை கொடுக்க சொல்லி பலரிடமும் சண்டை போட்டு வருகின்றனர். அதாவது அஜித் சார் என்று தான் சொல்ல வேண்டுமாம்.

இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு நடிகர் சித்தார்த் தல அஜித் பற்றி ஒரு பதிவு போட்டுள்ளார். அதற்கு ரசிகர் ஒருவர், டேய் அஜித் சார் என்று மரியாதையாக கூப்பிடு என எச்சரித்தார். ஆனால் அதை ஜாலியாக எடுத்துக் கொண்ட சித்தார்த், வடிவேலுவின் ஆஹான் என்ற டயலாக்கை போட்டு சரியான நோஸ் கட் செய்துவிட்டார். அஜித்தின் பிறந்த நாள் விரைவில் வர இருப்பதால் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

siddharth-reply-tweet
siddharth-reply-tweet

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -