படத்தில் மட்டும் பேசுற ஹீரோ( விஜய், ரஜினி ) நா இல்ல.. நிஜத்திலும் பொளந்து கட்டிய சித்தார்த்

நடிகர் சித்தார்த் ஒரு காலத்தில் ஹீரோவாக பல வெற்றி படங்களை கொடுத்தார். அதன் பிறகு இவருக்கு பெரிய அளவில் வெற்றி படங்கள் எதுவும் அமையாததால் சமூகத்தின் மீது அக்கறை கொண்டு தனக்குத் தோன்றும் கருத்துக்களை வெளிப்படையாக கூறி வந்தார்.

சமீபகாலமாக சித்தர் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் இந்தியாவில் நடக்கும் ஆட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் பற்றி தைரியமாக தன் கருத்துக்களை முன்வைத்து வந்தார்.

இதனால் பல அரசியல்வாதிகளுக்கு எதிரியாக மாறினார் நடிகர் சித்தார்த். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தைரியமாக தன் கருத்துக்களை முன்வைத்த சித்தார்த்துக்கு மீண்டும் ஒரு பிரச்சனை எழுந்துள்ளது.

இந்தியாவில்  கொரோனா  இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டதால் பல உயிர்கள் பறிபோயுள்ளன. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் எந்த ஒரு ஆக்ஸிஜன் கட்டுப்பாடும் இல்லை, எனவும் தவறான கருத்துகளை பறப்புவர்களுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார்.

இதனை மேற்கோள்காட்டி சித்தார்த் அவரது சமூக வலைதளப் பக்கத்தில் பொய் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அவரது கன்னத்தில் அறையப்படும் என வெளிப்படையாக கூறியிருந்தார்.

இதனால் கோபமடைந்த பாஜகவினர் அவரது அலைபேசி எண்ணை சமூகவலைதளத்தில் பரப்பி விட அவருக்கு 500 க்கும் மேற்பட்ட அலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. மேலும் குடும்பத்தினரையும் இழிவாகப் பேசியுள்ளனர்.

siddharth
siddharth

இதனுடைய ஆதாரங்களை தற்போது போலீசாரிடம் ஒப்படைத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் சித்தார்த்துக்கு ஆதரவாக இந்திய அளவில் ஹஷ்டாக் (   #IstandwithSiddarth ) டிரென்ட் செய்தனர் நெட்டிசன்கள்.

விஜய் மற்றும் ரஜினி படத்துக்கு அரசை எதிர்த்து வசனம் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர், ஆனால் களத்தில் இறங்கி சண்டை செய்யும் சம்பவம் சித்தார்த்துக்கு தற்போது எளிதாகிவிட்டது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்