டிசம்பரில் திருமணம்., திடீர் மரணத்தால் உறைந்து போன காதலி.. பிக் பாஸ் பிரபலத்திற்கு நேர்ந்த சோகம்

ஹிந்தி பிக்பாஸ் சீசன் 13ல் பங்கேற்றது மட்டுமல்லாமல் டைட்டில் வின்னர் ஆக மாறியதன் மூலம் பிரபலமானவர் தான் பாலிவுட் நடிகர் சித்தார்த் சுக்லா. இவர் ஒரு சில படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தான் எக்கச்சக்கமான ரசிகர் பட்டாளம் சித்தார்த் சுக்லாவிற்கு கிடைத்தது. இவர் 1980 டிசம்பர் 12ஆம் தேதி பிறந்துள்ளார். தமிழில் ‘மண்வாசனை’ என்ற நெடுந்தொடரில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சித்தாத் சுக்லாவிற்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சித்தார்த் சுக்லா, ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதாக, அதிர்ச்சித் தகவலை மருத்துவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இவருடைய மறைவு பாலிவுட் மட்டுமல்லாமல் திரைத்துறை ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெறும் 40 வயதான சித்தார்த் சுக்லாவின் மறைவு திரையுலகில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியது. அவரது குடும்பமும் ஆறாத் துயர் அடைந்துள்ளனர். இந்த செய்தி பொய்யாக இருக்கக் கூடாதா என பலரும் ஏங்கித் தவித்தனர். இவருடைய மறைவிற்கு அரசியல் முதல் சினிமா பிரபலங்கள் என சமூக வலைதளங்களில் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.

கடந்த 2ஆம் தேதி திடீர் மாரடைப்பால் மரணமடைந்த சித்தாத் சுக்லாவின் இறுதிச் சடங்கில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இன்னிலையில் சித்தாத் சுக்லா குறித்த புதிய தகவல் ஒன்று ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில வருடங்களாக சித்தாத் சுக்லாவும், நடிகை ஷெஹ்னாஸ் கில்லும் காதலித்து வந்துள்ளனர். இவருடைய வீட்டின் சம்மதத்துடன் சித்தார்த்துக்கும், ஷெஹ்னாஸுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. அதன்பின்பு டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்துகொள்ளலாம் என்று இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளனராம்.

bollywood actor
bollywood actor

இவர்களது திருமணத்தை மூன்று நாட்கள் மும்பையில் நடத்த திட்டமிட்டு இருந்தனராம். இவர்களது திருமண ஏற்பாடு ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்துள்ளது. திருமணம் நெருங்கும் நேரத்தில் அனைவரிடமும் சொல்லிக்கொள்ளலாம் என்று ரகசியமாக வைத்துள்ளனர். திருமணத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருந்த நிலையில் சித்தாத் சுக்லாவின் திடீர் மரணத்தால், அவருடைய காதலியான ஷெஹ்னாஸ் பெரும் சோகத்தில் உறைந்துள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்