திருமணம் வரை சென்று 3 நடிகைகளை கழட்டிவிட்ட சித்தார்த்.. நான்காவதாக சிக்கிய அமுல் பேபி

சித்தார்த் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றினார். பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார். இவருக்கு இன்றும் பெண் ரசிகைகள் ஏராளம் ஆனால் வெற்றி படங்கள் தமிழ் சினிமாவில் குறைவு. தெலுங்கில் வெற்றி படங்கள் கொடுத்து வந்த சித்தார்த் இந்தியிலும் நடித்து வந்தார். இவர் சமூக அக்கறையுடன் அனைத்தையும் தைரியமாகப் பேசுபவர்.

சித்தார்த் 2002இல் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மேக்னா என்ற பின்னணி பாடகி காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். பின்னர் கருத்து வேறுபாட்டின் காரணமாக 2007ல் விவாகரத்து பெற்றனர். அதன்பின் சித்தார் திரைப்படங்களில் நடிப்பதை அதிகப்படுத்தினார்.

தெலுங்கில் நடிக்கும் போது சித்தார்த், ஸ்ருதிஹாசன் இருவரும் இணைந்து நடித்தனர். இதில் ஸ்ருதிஹாசன் சித்தார்த்தை விரும்பினார் சித்தார்த்தும் விரும்பினார். இருவரும் திருமணம் ஆகாமல் தனியாக வாழ்ந்து வந்தனர். ஒரு கட்டத்தில் ஸ்ருதி ஹாசன் செய்வது சித்தார்த்துக்கு பிடிக்காததால் இருவரும் பிரிந்தனர். இதனை ஸ்ருதிஹாசன் ஒப்புக்கொண்டார்.

பின்னர் சித்தார்த் அவர்கள் சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.  அனைவரும் அறிந்த காதல் ஜோடியாக வலம் வந்தனர். திருமணமாகாமல் இருவரும் லிவிங் டுகெதர் என்று மகிழ்ச்சியாக வாழ்ந்தனர். பின்னர் இரு வீட்டாரின் சம்மதத்து திருமணம் வரை சென்றது. பின்னர் சித்தார்த் நடவடிக்கைகள் பிடிக்காமல் சமந்தா சித்தார்த் விட்டு விலகினார். சித்தார்த்தை பழிவாங்க நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இப்பொழுது காற்றுவெளியிடை திரைப்படத்தின் ஹீரோயின் அதிதி, சித்தார்த்தும் காதல் செய்வது தெரிய வந்துள்ளது. இருவரும் ஒன்றாக செல்வது ஒன்றாக தங்குவதுன்று அனைவருக்கும் தெரியும்படி செய்து வருகின்றனர். சித்தார்த்தின் வலையில் அடுத்து அதிதி வந்திருப்பது ஆச்சர்யப்பட வைக்கிறது சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சித்தார்த்தை பற்றி தெரிந்தும் அதிதி காதல் செய்கிறார். ஏனென்றால் சித்தார்த் திரிஷா, ஆண்ட்ரியா, அமலா பால் மற்றும் இந்தி பட ஹீரோயின்கள் வரை இவர் காதலிக்காதவர்களே இல்லை எனலாம். என்னதான் சமூக கருத்துக்கள் சித்தார்த் கூறினாலும் இவர் செய்யும்  செயலினால் இவரது பெயர் இன்னும் மோசமடைந்து வருகிறது.

குறிப்பாக இவருக்கு தமிழ், தெலுங்கு என எந்த சினிமாவிலும் இவருக்கு மார்க்கெட் இல்லை ஆனால் காதல்செய்வது மட்டும் அப்படியே இருக்கிறது என சினிமா வட்டாரத்தில் பேசுகின்றனர்.

Sharing Is Caring:

அதிகம் படித்தவை