2வது முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் சித்தார்த்.. அவரை நம்பியா போறீங்க?

நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் சிவப்பு மஞ்சள் பச்சை என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து தன்னுடைய இழந்த மார்க்கெட்டை மீட்டெடுத்துள்ளார் சித்தார்த். அதனைத் தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான அருவம் திரைப்படமும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் மீண்டும் தன்னுடைய மார்க்கெட் பிக்கப் ஆவதை உணர்ந்த சித்தார்த் அடுத்தடுத்து நல்ல நல்ல இயக்குனர்களுடன் சேர்ந்து படம் செய்வதில் ஆர்வமாக இருக்கிறார்.

அந்த வகையில் அடுத்ததாக தனக்கு ஏற்கனவே காதலில் சொதப்புவது எப்படி என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த பாலாஜி மோகன் இயக்கத்தில் விரைவில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

பாலாஜி மோகனின் கடைசி வெற்றி படமும் காதலில் சொதப்புவது எப்படி தான். அதன்பிறகு தனுசை வைத்து மாரி, மாரி 2 இது போன்ற படங்கள் எடுத்தாலும் பெரிய அளவு அவருக்கு பெயர் வாங்கித் தரவில்லை.

அதனை தொடர்ந்து மீண்டும் தனுஷுடன் இணையப் போவதாக செய்திகள் இணையத்தில் வெகு வேகமாக பரவி வந்த நிலையில் தற்போது அதை தவிர்த்து சித்தார்த்துடன் இணைய உள்ளதாக ஒரு தகவல் வந்து கொண்டிருக்கின்றன.

பெரிய அளவு வெற்றிப்படம் கொடுக்க வில்லை என்றாலும் இவருக்கு மட்டும் எப்படி படவாய்ப்பு கிடைக்கிறது என பல இயக்குனர்கள் இவர் மீது பொறாமையில் இருக்கிறார்களாம். மேலும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக உள்ளதாம்.

balaji mohan-siddharth-cinemapettai
balaji mohan-siddharth-cinemapettai
- Advertisement -