திங்கட்கிழமை, டிசம்பர் 16, 2024

சரித்திரம் பேசும் கதையில் நடித்துள்ள சிபிராஜ் .. மாயோன் படம் எப்படி இருக்கு?

சமீபகாலமாக சிபிராஜ் நடிப்பில் வெளிவரும் திரைப்படங்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்வது கிடையாது. ஆனாலும் அவர் முயற்சியை கைவிடாமல் புதுப்புது கதாபாத்திரங்களையும், வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் இன்று அவருடைய நடிப்பில் திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் மாயோன் ரிலீஸ் ஆகியிருக்கிறது. கிஷோர் இயக்கத்தில் தன்யா ரவிச்சந்திரன், பகவதி பெருமாள், கே எஸ் ரவிகுமார், ராதாரவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள இந்த திரைப்படத்திற்கு தற்போது பாசிட்டிவான விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

மாயோன் மலை என்ற பகுதியில் இருக்கும் கிருஷ்ணர் கோவிலில் இருக்கும் புதையல் பற்றி தொல்லியல் துறை ஆய்வு செய்து வருகின்றனர். அதற்கு கேஎஸ் ரவிக்குமார் தலைமை வகிக்கிறார். அதில் ஆராய்ச்சியாளர்களாக இருக்கும் சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன், பகவதி பெருமாள் ஆகியோர் அந்த புதையலை கைப்பற்ற நினைக்கிறார்கள்.

ஆனால் அங்கு சில மர்மமான விஷயங்கள் நடக்கிறது. அதையெல்லாம் தாண்டி அவர்கள் அந்த புதையலை கைப்பற்றினார்களா, இல்லையா என்பதுதான் கதை. வழக்கம்போல சிபிராஜ் இந்த படத்தில் தன்னுடைய கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். அந்த வகையில் அவருக்கு பாராட்டு தெரிவிக்கலாம். ராதாரவி, கே எஸ் ரவிக்குமார் ஆகியோரும் தங்கள் வேலையை சரியாக செய்திருக்கின்றனர்.

மேலும் படத்தின் விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் காட்டப்பட்ட காட்சிகளும், மலையை சுற்றி நடக்கும் நிகழ்வுகளும் கதையின் போக்குக்கு வலு சேர்க்கிறது. அந்த வகையில் இயக்குனர் சில விஷயங்களில் நிறைய மெனக்கெட்டிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதுதவிர இளையராஜாவின் இசையும் படத்திற்கு கூடுதல் பலம். மற்றபடி சில இடங்களில் அம்புலிமாமா கதை போன்று தெரிந்தாலும் படம் சுவாரசியமாகவே நகர்கிறது. அந்த வகையில் சரித்திரம் பேசும் படி வெளிவந்துள்ள இந்த படம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.

- Advertisement -

Trending News