வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

மாயோன் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு.. தெலுங்கில் 350 தியேட்டர்களில் வெளியிட முடிவு

சிபி சத்யராஜ், தன்யா ரவிச்சந்திரன், ராதாரவி கேஎஸ் ரவிக்குமார் உட்பட பலர் நடிப்பில் அருண்மொழி மாணிக்கம் அவர்களின் திரைக்கதை மற்றும் தயாரிப்பில் என் கிஷோர் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள திரைப்படம் மாயோன்.

அறிவியலும் ஆன்மீகமும் ஒன்றோடு ஒன்று கலந்தது என்பதை மையக் கருவாகக் கொண்டு உருவாக்கியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் குடும்பத்துடன் கொண்டாடும் படமாக இடம் பிடித்துள்ளது.

மேலும் பார்வையற்றவர்களுக்கான பிரத்தியேகமாக ஆடியோ டிஸ்கிரிப்ஷனுடன் படம் வெளியாகியதும் மக்கள் மத்தியில் பாராட்டுக்களை பெற்றது. தமிழகத்தில் கிடைத்த வரவேற்பு காரணமாக இந்த படத்தை வரும் ஜூலை 7ஆம் தேதி தெலுங்குவில் மிக பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

படத்தை பார்த்த தெலுங்கு விநியோகிஸ்தர் இந்த படம் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றி பெறும் என படத்தை 350க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியிட போவதாக தெரிவித்துள்ளார்.

தமிழகத்தை போலவே தெலுங்கிலும் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.சிபிராஜ் மாயோன் படத்தில் சிறப்பாக நடித்துள்ளதால் ரசிகர்களிடமும் பெரிய அளவில் படம் வெற்றி பெற்றதால் சத்யராஜின் பெயரை சிபிராஜ் காப்பாற்றி உள்ளதாக கூறி வருகின்றனர்.

- Advertisement -

Trending News