ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கேலி செய்த வடக்கர்கள், வச்சு செஞ்ச ஸ்ருதிகா.. இந்தி பிக்பாஸ் கொஞ்சம் பாருங்க பாஸ்!

Shrutika BB18: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி எட்டாவது சீசன் நமத்துப்போன பட்டாசாக தான் இருக்கிறது. விஜய் சேதுபதி வந்த சனி ஞாயிறு எபிசோடுகளை தவிர பெருசாக சொல்வதற்கு எதுவுமே இல்லை. இந்த விஷயத்தில் இந்தி பிக் பாஸ் ரணகளமாக இருக்கிறது.

இதற்கு முக்கிய காரணம் நடிகை ஸ்ருதிகா என்று சொன்னால் நம்ப முடிகிறதா. அசால்ட் ஆக மாஸ் காட்டி வருகிறார் ஸ்ருதிகா. முதல் நாள் உள்ளே போகும்போதே சல்மான் கானை வணக்கம் தமிழ்நாடு என சொல்ல வைத்தார்.

அதை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டுக்குள் அவ்வப்போது தமிழ் வார்த்தைகளை பேசி ரணகளப்படுத்தி வருகிறார். அதிலும் இரண்டு நாட்களுக்கு முந்தைய எபிசோடில் ஒரு கப் காபி கேட்டு ஸ்ருதிகா பிக் பாஸ் இடம் கெஞ்சியது ரொம்பவும் க்யூட்டாக இருந்ததாக நெட்டிசன்கள் அந்த வீடியோ கிளிப்பை வைரலாக்கினார்கள்.

வச்சு செஞ்ச ஸ்ருதிகா

மேலும் தான் அடிக்கடி தமிழ் பேசுவதையும், ஹிந்தியில் பேசுவதே தமிழ் போன்று இருப்பதாலும் சிலர் தன்னை கேலி செய்கிறார்கள், என்னை பார்த்தது முகத்தை வேறு மாதிரி மாற்றுகிறார்கள் என ஸ்ருதிகா ரொம்பவும் மனம் உடைந்து பேசிய வீடியோ கிளிப்பும் வைரலாகி வந்தது.

இந்த நிலையில் தன்னை கேலி செய்தவர்களை ஸ்ருதிகா லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வீடியோ கிளிப் ஒன்று இப்போது வைரலாகி வருகிறது. சமீபத்தில் கொடுக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில் ஸ்ருதிகா போட்டியாளர் ஒருவரின் பெயரை சொல்லி நான் பேசும் விதத்தையும், மொழியையும் நீங்கள் கேலி செய்கிறீர்கள்.

கேலி மற்றும் கிண்டல் இரண்டிற்கு மேல் வித்தியாசம் இருக்கிறது. அந்த வித்தியாசம் என்னவென்று எனக்குத் தெரியும். நான் எல்லாவற்றையும் எதார்த்தமாக எடுத்துக் கொள்வேன். நீங்கள் என்னை பற்றி என்ன சொன்னாலும் எனக்கு கவலை இல்லை. எல்லாத்தையும் செய்து விட்டு தமிழ் பிடிக்கும், தமிழ்நாடு பிடிக்கும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என முகத்திற்கு நேராக பேசியிருக்கிறார்.

- Advertisement -

Trending News