ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 10, 2024

தமிழ் பிக்பாஸுல ஸ்ருதிகாவை எப்படி மிஸ் பண்ணாங்க?. இந்தி பிக்பாஸில் ட்ரெண்டாகும் தமிழ் பொண்ணு

Shrutika: விஜய் டிவியின் பிரபலமான ஷோ பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து நான்கு நாட்கள் ஆகிவிட்டது. இதுவரை மக்களின் விரும்ப தகுந்த போட்டியாளராக யாருமே மாறவில்லை. எல்லோருமே பரிச்சயமான விஜய் டிவி செலிபிரிட்டி தான் என்றாலும் யாரை நம்புவது என மக்கள் இன்னும் குழப்பத்தில் தான் இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் தமிழ் ரசிகர்கள் திடீரென இந்தி பிக் பாஸில் கவனம் செலுத்த ஆரம்பித்து இருக்கிறார்கள். நம்ம ஆளுங்களுக்கு தமிழ் பிக் பாஸ் பார்க்கவே நேரம் இருக்காது, இதுல ஹிந்தி பிக் பாஸ் எப்படின்னு ஒரு சந்தேகம் வரலாம்.

இதற்கு ஒட்டுமொத்த காரணமும் நடிகை ஸ்ருதிகா தான். சூர்யாவின் ஸ்ரீ மற்றும் மாதவனின் நளதமயந்தி படங்களில் நடித்த ஸ்ருதிகா அதன்பின்னர் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார். பல வருடங்களுக்குப் பிறகு அவரை மக்களுக்கு அறிமுகம் செய்தது விஜய் டிவி தான்.

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் ஸ்ருதிகா கலந்து கொண்டார். அப்போது தான் இந்த ஹீரோயினுக்குள் இருக்கும் குழந்தைத்தனமான பேச்சு மற்றும் வெகுளித்தனம் வெளியில் தெரிந்தது.

ஸ்ருதிகாவை எப்படி மிஸ் பண்ணாங்க?

இவர் இதனால் பெரிய அளவில் தமிழ் ரசிகர்களிடையே கொண்டாடப்பட்டார். அதை தொடர்ந்து விஜய் டிவியின் ஒரு சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அது மட்டும் இல்லாமல் இயற்கை முறையில் முகப்பூச்சுகள் செய்யும் தொழிலும் செய்து வருகிறார்.

இந்த நிலையில் எட்டாவது சீசன் ஆரம்பிக்கும் பொழுது ஸ்ருதிகா அதில் கலந்து கொள்வார் என செய்திகள் வெளியானது. ஆனால் தமிழ் பிக் பாஸை விட்டுவிட்டு அவர் இந்தி பிக் பாஸில் களம் இறங்கி இருக்கிறார். முதல் நாளே தன்னுடைய வெகுளித்தனமான குணத்தால் ரசிகர்களை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ருதிகா நடிகர் சல்மான்கானை வணக்கம் தமிழ்நாடு என்று சொல்லுங்கள் என சொல்லி தமிழ் ரசிகர்களையும் கவுத்து விட்டார்.

தற்போது ஸ்ருதிகா பிக் பாஸ் வீட்டில் செய்யும் ஒரு சில சேட்டைகளை தான் இந்தி ரசிகர்கள் பெரிய அளவில் வைரல் ஆக்கி வருகிறார்கள். ஹிந்தி பிக் பாஸ் பற்றி எதுவுமே பார்க்காத நமக்கே இந்த வீடியோக்கள் ரெக்கமண்டேஷனில் வருகிறது.

ஸ்ருதிகாவிடம் பிக் பாஸ் ஏதோ கேள்வி கேட்க அதற்கு சும்மா பிக் பாஸ் என தமிழில் பதில் சொல்கிறார். அதற்கு பிக் பாஸ் வாட் சும்மா என கேட்கிறார். இந்த வீடியோ தற்போது பெரிய அளவில் வைரலாகி வருகிறது. அது மட்டும் இல்லாமல் யார் இந்த ஸ்ருதிகா என இந்தி சினிமா ரசிகர்கள் இன்டர்நெட்டில் தேடும் அளவுக்கு வைரலாகி விட்டார்.

இப்படி ஒரு கன்டென்ட் கொடுக்கும் ஸ்ருதிகாவை தமிழ் பிக் பாஸ் குழு எப்படி மிஸ் செய்தது என பலரும் தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியில் எங்கு பார்த்தாலும் சண்டை சச்சரவு என்றிருக்கும் போது ஸ்ருதிகா கொடுக்கும் வைப் வேற லெவலில் இருக்கிறது

- Advertisement -spot_img

Trending News