வியாழக்கிழமை, டிசம்பர் 12, 2024

தமிழில் பேசுவதால் இந்தி பிக் பாஸில் தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் ஸ்ருதிகா.. இதெல்லாம் ரொம்ப தப்பு பாஸ்

Shrutika: இந்தி பிக் பாஸ் சீசன் 18 நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதிகா போட்டியாளராக பங்கேற்று இருக்கிறார். இதன் மூலம் முதன் முதலில் இந்தி பிக் பாஸில் கலந்து கொண்ட தமிழ் பெண் என்ற பெருமையை இவர் வாங்கி இருக்கிறார்.

ஸ்ருதிகாவுக்கு தமிழ்நாட்டில் ரசிகர்கள் ரொம்ப அதிகம். படங்களில் நடித்ததை தாண்டி குக் வித் கோமாளி மூன்றாவது சீசனில் இவர் பங்கேற்ற பிறகுதான் இவருக்கான அங்கீகாரம் தமிழ் சினிமா ரசிகர்கள் இடையே கிடைத்தது.

தொடர்ந்து விஜய் டிவியின் ஒரு சில நிகழ்ச்சிகளில் தலைகாட்டி வந்த ஸ்ருதிகா சொந்தமாக யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இந்தி பிக் பாஸில் கலந்து கொண்டது தமிழ் மக்களுக்கு ஆச்சரியமாகவும் அதே நேரத்தில் பெருமையாகவும் இருந்தது.

இதெல்லாம் ரொம்ப தப்பு பாஸ்

கடந்த வாரத்தில் ஒரு வீடியோவில் ஸ்ருதிகா சும்மா என்ற தமிழ் வார்த்தையை உபயோகப்படுத்து இருப்பார். இந்த வீடியோ பெரிய அளவில் வைரலானது. இதுவரை இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் ஆரம்பித்து ஒரே வாரத்தில் யாருமே மக்கள் மனதை பெரிதாக கவர்ந்தது இல்லை.

ஆனால் ஸ்ருதிகாவுக்கு அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என மும்பையைச் சேர்ந்த நேயர் ஒருவர் ஸ்ருதிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்திலேயே பகிர்ந்து இருக்கிறார். அந்த அளவுக்கு வைரல் ஆகி வரும் ஸ்ருதிகா தன் பேசும் தமிழால் ஒரு சில இடங்களில் அவமானப்படுத்தப்படுவதாக தன்னுடைய சக போட்டியாளர் ஒருவரிடம் சொல்லி இருக்கிறார்.

ஒரு சில நேரங்களில் ஸ்ருதிகாவுக்கு தன்னை அறியாமல் தமிழ் வார்த்தை வந்து விடுகிறது. மேலும் அவர் பேசும் இந்தியும் தமிழில் பேசுவது போன்ற பாவணையை தான் கொடுக்கிறது. இதனால் சக போட்டியாளர்கள் அவருக்கு பின்னால் பேசுவதாகவும், அவரைப் பார்த்தவுடன் முகபாவனையை மாற்றிக் கொள்வதாகவும், கமெண்ட் பாஸ் பண்ணுவதாகவும் ஸ்ருதிகா மனவேதனையுடன் சொல்லுகிறார்.

இந்த வீடியோவை அவருடைய கணவர் அர்ஜுன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். உள்ளுக்குள்ளே போட்டியாளர்களால் அவமானப்படுத்தப்பட்டாலும் ஸ்ருதிகாவுக்கு வெளியில் பெரிய அளவில் வரவேற்பு இருக்கிறது. கண்டிப்பாக அவர் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுவார் என பலரும் அந்த வீடியோவுக்கு கீழ் கமெண்ட் செய்து இருக்கிறார்கள்.

- Advertisement -

Trending News