40 பேருடன் சூட்டிங் ஸ்பாட்டிற்கு செல்லும் ஸ்ருதிஹாசன் மற்றும் பிரபாஸ்.. சலார் படத்திற்கே சவால் விட்ட மர்ம நபர்கள்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். ரவி தேஜாவுடன் நடித்து சமீபத்தில் வெளியான கிராக் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று மாபெரும் வெற்றி பெற்றது.

இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பிரபாஸுடன் சலார் படத்தில் நடிப்பதாக ஸ்ருதிஹாசனின் பிறந்தநாளன்று படக்குழு அறிவித்தனர். தற்போது படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

முதலில் ஸ்ருதிஹாசன் மற்றும் பிரபாஸ் மிகப்பெரிய நட்சத்திரம் என்பதால் ரசிகர்கள் அதிகமாக கூடுவார்கள் என எதிர்பார்த்து காவலர்களிடம் தங்களுக்கு பாதுகாப்பு கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.

இதையடுத்து ஒரு சில காவலர்கள் பாதுகாப்பு கொடுத்து வந்தனர் ஆனால் தற்போது கோலார் தங்க வயல் அருகே படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த தகவலை அறிந்த அந்த பகுதி நக்கலைட்ஸ் பயங்கரவாதிகள் தங்கள் பகுதியில் படப்பிடிப்பு நடத்தக்கூடாது என மிரட்டியதாகவும், அதுமட்டுமில்லாமல் படப்பிடிப்பு நடத்தும் போது ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் என பயந்து படக்குழு தற்போது போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர்.

prabhas
prabhas

படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட போலீஸார் படக்குழுவினர்களுக்கு பாதுகாப்பு கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் ஸ்ருதிஹாசனுக்கு என தனி போலீஸ் பாதுகாப்பும், பிரபாஸுக்கும் அதேபோல் தனி போலீஸ் பாதுகாப்பும் கொடுத்து வருவதாக கூறியுள்ளனர். படப்பிடிப்பை நடத்த முடியாத நிலைமை உள்ளதால் பிரபாஸ் கண்கலங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்