அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமலஹாசன்.. பதறிப்போய் ஷ்ருதி ஹாசன் வெளியிட்ட அறிக்கை

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் காலில் அறுவை சிகிச்சை செய்வதாக அறிவிப்பை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து ரசிகர்கள் பலரும் மன உளைச்சலுக்கு ஆளாகினர்.

கமல்ஹாசன் வருகிற சட்டமன்ற தேர்தலுக்காக மக்களை நேரில் சந்தித்து கட்சியின் கொள்கைகளை கூறி வருகிறார். மக்களிடம் மாற்றத்தை எதிர்பார்க்கின்றேன் என அவ்வப்போது மக்களிடம் எழுச்சியை ஏற்படுத்தி வருகிறார்.

தொடர்ந்து அவர் வருகிற சட்டமன்ற தேர்தலுக்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் கமல்ஹாசனுக்கு பல வருடங்களுக்கு முன்பு விபத்தில் ஏற்பட்ட வலியின் காரணமாக தற்போது அவரது காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளனர்.

இதனால் சில நாட்கள் ஓய்வெடுப்பதாகவும் மக்களை நேரில் சந்திக்க முடியாமல் இருந்தாலும், ஸ்மார்ட் தொழில் நுட்பத்தின் மூலம் மக்களை சந்தித்து எனது கொள்கையை வெளிக்கொண்டு வருவேன் என வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

ஷ்ருதி ஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் இருவரும் ஒரு அறிக்கையில் அறுவை சிகிச்சை நிபுணர் மோகன் குமார் தலைமையில் அப்பாவிற்கு வெற்றிகரமாக காலில் அறுவை சிகிச்சை முடித்து உள்ளதாகவும் இந்த அறுவை சிகிச்சையில் பணியாற்றிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.

kamal haasan leg surgery
kamal haasan leg surgery

அதுமட்டுமில்லாமல் அப்பா விரைவில் வீடு திரும்புவார் மக்களை களத்தில் சந்திப்பார் என தெரிவித்தது மட்டுமில்லாமல் உங்களது அன்பிற்கும் பிரார்த்தனைகளுக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் அந்த கடிதத்தில் குறிபிட்டுள்ளனர்.