மன நல மருத்துவரை சந்தித்த ஸ்ருதிஹாசன்.. காரணம் கேட்டு அதிர்ந்து போன கமல் ரசிகர்கள்!

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் முதன்மையானவர் உலகநாயகன் கமலஹாசன். அரசியல் சினிமா என இரண்டையும தராசில் வைத்தது போல் நூல் கட்டி நிறுத்துவார். சமூக வலைகளின் கருத்தால் சமூகத்திலும் மாற்றம் கொண்டு வர நினைப்பவர் கமலஹாசன்.

கமலஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் நடிகை இசையமைப்பாளர் பாடகர் என பன்முகத்தன்மை கொண்டவர். கே.ஜி.எஃப் இயக்குனர் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் “சலார்” படத்தில் நடித்து வந்தார். இப்போது விஜய் சேதுபதியுடன் “லாபம்” படத்தில் படுபிசியாக இருக்கிறார் அம்மணி.

சமீபத்தில் அவரளித்த பேட்டியில் நாம் மனநல ரீதியாக மிகவும் சிரமப்படுகிறோம் என்றும் என்ன பிரச்சினை என்றாலும் எவரிடமும் சொல்ல தயங்குகிறோம் என்றும் கூறினார்.

மேலும்தான் உளவியல் படித்தவர் கல்லூரியை விட்டு விலகினாலும் உளவியல் நண்பர்களோடு அடிக்கடி பேசுவதாகவும். சினிமா எப்போதும் அழுத்தம் தரக்கூடிய துறை என்றும் அவ்வப்போது தானும் மனநல மருத்துவர்களை சந்தித்து ஆலோசனைகளை கேட்பதுண்டு என்றும் கூறினார்.

அவரவர் பிரச்சினைகளை வெளியில் சொனனால் மட்டுமே தீர்வுகள் கிடைக்கும் என்றும் கூறினார்.

shruthi-hassan-cinemapettai
shruthi-hassan-cinemapettai
- Advertisement -