கமல் 8 அடி பாய்ந்தால், 16 அடி பாயும் ஸ்ருதிஹாசன்.. கே ஜி எஃப் இயக்குனர் வெளியிட்ட பிரமாண்ட அறிவிப்பு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். இவரது நடிப்பில் லாபம் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தினை ஸ்ருதிஹாசன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இன்று ஸ்ருதிஹாசன் பிறந்தநாள் என்பதால் பல பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஸ்ருதிஹாசனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அவர் நடிக்கும் பிரமாண்ட படத்தின் அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளனர்.

கே ஜி எஃப் படத்தை இயக்கியதன் மூலம் இந்திய அளவில் பிரபலமடைந்தவர் பிரசாந்த் நில். இவர் இயக்கும் அடுத்த சலார் படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கும் தகவலை புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளனர்.

shruti haasan
shruti haasan

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கே ஜி எஃப் படம் போல் சலார் படமும் வெற்றி பெற்று இந்திய அளவில் பிரபலமடைந்தால் கமல்ஹாசன் பெற்ற புகழை விரைவில் ஸ்ருதிஹாசனும் பெற்று விடுவார் என கூறி வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல் அப்பா 8 அடி பாய்ந்தால், குட்டி 16 அடி பாயும் என்றும் சலார் படம் வெற்றி அடைந்தால் கமல்ஹாசனின் மகள் என்பதை நிறுத்தி விடுவார். மேலும் உலகநாயகி என்ற பட்டப் பெயர் கூட விரைவில் கிடைத்து விடலாம் என சினிமா வட்டாரத்தில் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்