அப்பா கமல் தேர்தலில் தோற்றது பற்றி ஸ்ருதி ஹாசன் போட்ட அதிரடி பதிவு.. வீழ்வேனென்று நினைத்தாயோ!

சினிமாவில் நடிக்கும் நடிகர்கள் அரசியலில் களம் இறங்குவது ஒன்றும் புதிதல்ல. அந்த வகையில் எம்ஜிஆர், சிவாஜி, விஜயகாந்த், சரத்குமார், டிஆர் ராஜேந்தர், கார்த்தி போன்ற பல நடிகர்கள் தனிக்கட்சி தொடங்கி சிலர் காணாமலும் போயுள்ளனர்.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி ஆட்சியை பிடிப்பார் என்று பார்த்தால் இடையில் கமல் மக்கள் நீதி மையம் என்ற கட்சியை ஆரம்பித்து கடைசி வரை போராடி தன்னுடைய பகுதியில் தோற்றார்.

பிஜேபியை சேர்ந்த வானதி ஸ்ரீனிவாசனுக்கும் மக்கள் நீதி மையம் கமலுக்கும் பலத்த போட்டி நடைபெற்ற நிலையில் கடைசியில் எப்படியோ வானதி ஸ்ரீனிவாசன் ஜெயித்துவிட்டார்.

அதனைத் தொடர்ந்து விரக்தியில் வெளியே வந்த கமல் வெற்றி தோல்வியை விட மக்களுக்கு நல்லது செய்வதே தன்னுடைய நோக்கம் என கூறி அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். அதன் பிறகு தற்போது தான் நடிக்கும் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் கமல்ஹாசனின் தோல்வி குறித்து அவரது மகள் ஸ்ருதிஹாசன் தன்னுடைய சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டது ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது. ஸ்ருதிகாசன், தன்னுடைய தந்தை வீழ்ந்து போகிறவர் அல்ல, எதிர்த்துப் போராடுபவர் என குறிப்பிட்டுள்ளார்.

கமல் இந்த முறை விட்டாலும் அடுத்த முறை கண்டிப்பாக எம்எல்ஏ ஆகிவிடுவார் என்றே கருத்துகளை அதிகம் வந்து கொண்டிருக்கின்றன. இளைஞர்கள் மத்தியில் கமலுக்கு நல்ல வரவேற்புள்ளது குறிப்பிடத்தக்கது.

kamal-shruthi-hassan-cinemapettai-01
kamal-shruthi-hassan-cinemapettai-01
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்