காதல் தோல்வி, மன உளைச்சல் போன்றவற்றில் இருந்து காப்பாற்றியது இதுதான்.. ஐடியா கொடுக்கும் ஸ்ருதிஹாசன்

முன்னணி நடிகர் உலக நாயகன் கமலஹாசனின் மகளாக வாரிசு நடிகையாக சினிமாவில் கலக்கி வரும் ஸ்ருதிஹாசன் கடந்த சில வருடங்களில் சில பல காதல் தோல்விகளை சந்தித்து பல வேதனைகளுக்கு உள்ளானார் என்பது அனைவருக்குமே தெரிந்ததுதான்.

முதலில் வெளிநாட்டு புகைப்பட கலைஞர் ஒருவரை காதலித்து வந்தார். அதற்கு முன்பே தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர் ஒருவரை காதலித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால் கடைசியில் அந்த வெளிநாட்டுக்காரர் அவரை ஏமாற்றி விட்டுச் சென்றதும் பாவம் புள்ள, உடைந்து விட்டது.

நீண்ட நாட்களாக தனிமையில் சோகத்தில் தவித்து வந்த ஸ்ருதிஹாசன் அதிலிருந்து எப்படி மீண்டு வந்து இன்னொரு காதலில் விழுந்தார் என்பது அனைவருக்குமே ஆச்சரியமாகத்தான் இருந்தது. இருந்தாலும் சினிமா நடிகைகளுக்கு காதல் வருவது சகஜம் தானே என ரசிகர்கள் சாதாரணமாக எடுத்துக் கொண்டனர்.

ஆனால் சினிமா நடிகையாக இருந்தாலும் காதல் தோல்வி என்றால் தனக்கு மன உளைச்சலில் இருக்கும் எனவும் அதிலிருந்து மீண்டு வருவதற்கு உதவியது இதுதான் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதாவது ஸ்ருதிஹாசனுக்கு கவிதை எழுதுவது மிகவும் பிடிக்குமாம். அந்தவகையில் தனிமையில் இருக்கும்போது கவிதை எழுதுவதும், கதை எழுதுவதும் என தன்னுடைய சிந்தனையை மாற்றியதால் தான் அதிலிருந்து தன்னால் வீடு வர உதவியது என குறிப்பிட்டுள்ளார்.

shruthi-hassan-01
shruthi-hassan-01

நாங்க எழுதாத கவிதையா என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஸ்ருதிகாசன் யோசனைக்கு விளையாட்டாக தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் கடந்த சில வருடங்களாக ஸ்ருதிஹாசன் அவருடைய திறமையை கூர் தீட்டி வருகிறாராம். அப்படி என்ன திறமை இருக்கிறது என ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Stay Connected

1,170,287FansLike
132,018FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -