சாகும் நிலையில் கிடக்கும் இயக்குநரை கண்டுகொள்ளாத ஸ்ருதிஹாசன்.. சப்போர்ட் செய்தவருக்கே இந்த நிலைமையா!

சினிமாவை பொறுத்தவரை நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு செல்வதற்கு மட்டுமே தன்னைச் சார்ந்தவர்கள் தேவை. அவர்களது நோக்கம் நிறைவேறியவுடன் சம்பந்தப்பட்டவர்களை கழட்டி விடுவது வாடிக்கை தானே.

அந்த வகையில் சமீபகாலமாக ஸ்ருதிகாசனுக்கு சப்போர்ட்டாக இருந்த இயக்குனர் ஒருவர் மூளைச்சாவு அடைந்து மிகவும் பரிதாபமான நிலையில் உள்ளபோதும் ஸ்ருதி ஹாசன் அதைப்பற்றி தற்போதுவரை போன் செய்து கூட ஒரு வார்த்தை கேட்கவில்லை என்பதுதான் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

அடுத்த முதல்வர் என ரசிகர்களால் பெரிதும் பாராட்டப் படும் கமலஹாசனின் மகள் தான் ஸ்ருதிகாசன். பல்வேறு காதல் சர்ச்சைகளுக்கு பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிவரும் ஸ்ருதி ஹாசன் நடிப்பில் அடுத்ததாக தமிழில் வெளியாக உள்ள திரைப்படம் லாபம்.

இந்த படத்தின் போது ஸ்ருதிகாசன் பல்வேறு சர்ச்சைகளை கிளப்பினார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். திடீரென படப்பிடிப்பிலிருந்து பாதியில் கிளப்பி விடுவது, விஜய் சேதுபதி மீது தேவையில்லாத பழியை சுமத்துவது என இருந்த பெயரையும் கெடுத்துக் கொண்டார்.

ஆனால் அப்போது கூட லாபம் படத்தின் இயக்குனரான எஸ்பி ஜனநாதன் ஸ்ருதிகாசன் மீது எந்த தவறும் இல்லை எனவும், அவர் கிளம்பும் போது என்னிடம் சொல்லி விட்டுத்தான் சென்றார் எனவும் அவருக்கு சப்போர்ட் செய்து அந்த பிரச்சனையில் ஸ்ருதி மாட்டாமல் தப்பிக்க வைத்தார்.

ஆனால் தற்போது ஜனநாதன் திடீரென மூளைச்சாவு ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நிலையிலும் இதுவரை ஸ்ருதிகாசன், என்ன ஆனது என ஒரு வார்த்தைகூட கேட்கவில்லையாம். இதுதான் தற்போது பெரிய பிரச்சனையாக கிளம்பியுள்ளது.

laabam-sp-jananathan
laabam-sp-jananathan

தனக்கு சப்போர்ட் செய்தவருக்கே இந்த நிலைமை என்றால் இவர்களை எல்லாம் எப்படி நம்புவது என்பது போன்ற பேச்சுக்கள் வலுத்துள்ளன. மேலும் இது ஸ்ருதிஹாசனுக்கு நிறைய நெகட்டிவ் விமர்சனங்களை ஏற்படுத்தி தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Stay Connected

1,170,257FansLike
132,059FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -