ஜோதிகாவுக்கே அக்கா போல மாறிய ஸ்ரேயா ஷர்மா.. ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய கொடுமை

தமிழ் சினிமாவில் பேபி ஷாலினி முதல் இப்பொழுது பிரபலமாக இருக்கும் நைனிகா வரை பல குழந்தை நட்சத்திரங்கள் வெள்ளித்திரையில் கலக்கியுள்ளனர். அப்படி படங்களில் குழந்தை நட்சத்திரமாக பார்த்த முகங்கள் தற்போது ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு வளர்ந்துவிட்டார்கள்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் சில்லுனு ஒரு காதல் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் ஸ்ரேயா ஷர்மா. இப்படத்தில் சூர்யா, ஜோதிகாவின் க்யூட்டான குழந்தையாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படி குழந்தை நட்சத்திரமாக பார்த்த ஸ்ரேயா தற்போது ஆள் அடையாளமே தெரியாமல் மாறிவிட்டார்.

ஸ்ரேயா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என்று பல்வேறு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். கடைசியாக இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான எந்திரன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார்.

ஸ்ரேயா தெலுங்கில் காயகூடு என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இப்படம் எதிர்பார்த்த அளவு போகவில்லை. அதன்பிறகு நாகர்ஜுன் தயாரிப்பில் நிர்மலா கான்வென்ட் என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார் ஸ்ரேயா.

shriya sharma
shriya sharma

இவருக்கு ஜோடியாக பிரபல நடிகர் ஸ்ரீகாந்தின் மகன் ரோஷன் மேகா நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் ஸ்ரேயா மிகவும் பிரபலம் ஆனாலும் அதன் பின் எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் படிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

shriya-sharma
shriya-sharma

ஆரம்பத்திலிருந்து ஸ்ரேயா ஷர்மாவுக்கு மிகப் பெரிய ஹீரோயின் ஆக வேண்டும் என்பதுதான் அவருடைய கனவாக இருந்தது. இதனால் பட வாய்ப்புகளுக்காக இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். ஆனால் ஆள் அடையாளம் தெரியாமல் கொழுகொழுவென இருக்கும் ஸ்ரேயாவுக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தபாடு இல்லை. ஆனாலும் ஸ்ரேயா தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் விதவிதமாக புகைப்படம் வெளியிட்டு வருகிறார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்