மகளுக்கு பாலூட்டிய ஸ்ரேயா.. என்னங்க இவ்ளோ க்யூட்டா இருக்கு

தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாகும் கமர்சியல் நடிகையாகவும் வலம் வந்தவர் ஸ்ரேயா. எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகையாக வலம் வரத்தொடங்கினார்.

முன்னணி நடிகையாக முயற்சி செய்து கொண்டிருந்த நேரத்தில் ரஜினி மற்றும் ஷங்கர் கூட்டணியில் உருவான சிவாஜி படத்தில் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஸ்ரேயா அதன் பிறகு தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டார்.

தமிழோடு நிறுத்திவிடாமல் இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் அளவுக்கு புகழ் ஈட்டியவர் தன்னுடைய கேரியரில் ஒரே ஒரு தப்பை செய்து மொத்த மார்க்கெட்டையும் இருந்து இப்போது வரை அதை மீட்டெடுக்க முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கிறார் என்று சொன்னால் நம்ப முடிகிறதா. ஆம் உண்மைதான்.

வடிவேலு ஹீரோவாக நடித்த இந்திரலோகத்தில் நான் அழகப்பன் என்ற படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருந்தார். அதோடு சரி, அதன்பிறகு ஸ்ரேயாவை யாரும் ஹீரோயினாக பார்க்க விரும்பவில்லை என்பது அப்பட்டமாக தெரிந்தது.

shriya saran
shriya saran

தமிழில் வாய்ப்புகள் இல்லாததால் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இதனால் தன்னுடைய வெளிநாட்டு காதலரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன ஸ்ரேயா தற்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயாகி உள்ளார்.

sherya-baby
sherya-baby

கணவர் மற்றும் குழந்தையுடன் ஜாலியாக பொழுதை கழித்து வரும் ஸ்ரேயா அந்த வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கடற்கரையில் தன்னுடைய மகளுக்கு பாலூட்டும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஸ்ரேயா. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் செம வைரல் ஆகியுள்ளது

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்