ஒரே நாளில் 3 மற்றும் ஒரே நேரத்தில் 34 படங்களின் ஷூட்டிங்.. எம்ஜிஆர் செல்லப்பிள்ளையின் சாதனை

தென்னிந்தியாவில் பல நடிகர்கள் ஒரே வருடத்தில் பல திரைப்படங்களில் நடித்து திரையரங்குகளில் வெளியிடுவார். அந்தவகையில் எம்.ஜி.ஆர், சிவாஜி உள்ளிட்டோரின் காலகட்டத்தில் அவர்களின் திரைப்படங்கள் எல்லாமே ஒரு வருடத்தில் குறைந்தது 10 படமாவது ரிலீசாகும்.

இதேபோலவே எம்.ஜி.ஆரின் செல்லப்பிள்ளையாக வலம் வந்த நடிகர் ஒருவர், ஒரே நாளில் 34 படங்களின் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ள செய்தி தற்போது வெளியாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த காலகட்டத்தில் சில நடிகர்களின் திரைப்படங்கள் ஹிட்டாகி விட்டால் அவர்களின் சம்பளங்களை உயர்த்திக் கொள்வர்.

Also Read : முதல் முறையாக கோடியில் வசூல் சாதனை படைத்த 2 படங்கள்.. எம்.ஜி.ஆர், சிவாஜியை போற்றும் திரை உலகம்.!

அது போதாது என சொன்ன நேரத்திற்கு ஷூட்டிங்குக்கு வராமல் இருப்பது, லேட்டாக வருவது, பணத்தை வாங்கிக்கொண்டு படங்களின் ஷூட்டிங்கிற்கே வராமல் இருப்பது என பல சேஷ்டைகள் செய்வார்கள். அப்படி இருக்கும் பல நடிகர்களுக்கு மத்தியில் விதிவிலக்காக விளங்கி ஒரே நாளில் 3 படங்களின் சூட்டிங்கில் நடித்து, இன்று வரை ரசிகர்களின் மனதில் தென்னிந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட்டாக வலம் வருகிறார்

எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்டோர் காதல், அதிரடி, சென்டிமெண்ட் படங்கள் என நடித்திருந்த தருவாயில், வல்லவன் ஒருவன் படத்தில் சி.ஐ.டி சங்கர் என்ற துப்பறிவு ஏஜென்டாக கையில் துப்பாக்கி, தோட்டா என தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் தான் நடிகர் ஜெய்சங்கர்.

Also Read : எம்.ஜி.ஆர் படத்தில் நடிக்கயிருந்த கமலஹாசன்.! ஆனால் யாரால் இப்படம் கைவிடப்பட்டது. அவரே கூறிய பதில்

நடிகர் ஜெய்சங்கர் 2000 ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்த நிலையில், அதற்கு முன்பு வரை பல படங்களில் துணை நடிகராக நடித்தவர். 1965 ஆம் ஆண்டு இரவும் பகலும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ஜெய்சங்கர், ஏழு வருடங்களில் மட்டுமே 100 படங்களில் ஹீரோவாக நடித்து சாதனைப் படைத்தவர்.

இவர் நடிக்க வந்து மூன்றாண்டுகளில் 25 படங்களில் நடித்து சாதனை படைத்தார். மேலும் ரஜினியின் முரட்டுக்காளை, கமலஹாசனின் அபூர்வ சகோதரர்கள் உள்ளிட்ட ஹிட் படங்களில் வில்லனாகவும் நடித்து கலக்கியவர். 300 படங்களுக்கும் மேலாக நடித்த ஜெய்ஷ்ங்கர் தான் சாம்பாதித்த பாதி சொத்துக்களை தான தர்மங்கள் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : சினிமாவில் சம்பாதித்ததை மக்களுக்கு வாரி கொடுத்த 4 வள்ளல்கள்.. காசு, துட்டு என திரியும் ஹீரோக்களுக்கு இது ஒரு பாடம்

Stay Connected

1,170,262FansLike
132,061FollowersFollow
1,320,000SubscribersSubscribe
- Advertisement -