விஜய், அஜித் குறித்து அதிர்ச்சியான தகவலை கூறிய கனல் கண்ணன்..

ஒரு சமயத்தில் சண்டைப்பயிற்சி என்றாலே நம் அனைவரின் நினைவிற்கு வருபவர் கனல் கண்ணன் தான். ஸ்டன்ட் மாஸ்டராக மட்டுமின்றி நடிகர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்தவர். 1990களில் தொடங்கி ஏராளமான படங்களுக்கு சண்டை பயிற்சி அளித்துள்ளார்.

பெரும்பாலான மொழி படங்களுக்கு ஸ்டன்ட் அமைத்துள்ள கனல் கண்ணன் ரஜினி, கமல், விஜய், அஜித் உள்ளிட்ட டாப் ஹீரோக்கள் பலருடனும் பணியாற்றி உள்ளார். மேலும் கமலின் அவ்வை சண்முகி, ரஜினியின் படையப்பா, சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய கனல் கண்ணன் விஜய், அஜித் உடன் பணியாற்றும் போது செட்டில் நடந்த சில சுவாரஸ்யமான, வேடிக்கையான நிகழ்வுகளை பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

அப்போது அஜித் குறித்து பேசிய கனல் கண்ணன், “அஜித்திற்கு முதுகு தண்டுவடத்தில் சர்ஜரி செய்யப்பட்டுள்ளது.
முதுகில் ஒரு எலும்பே இல்லை. மக்கள் நினைப்பது போல ஹீரோவாவது அவ்வளவு சுலபம் இல்லை. அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் வேண்டும்” என்றார்.

மேலும் விஜய் குறித்து கூறும்போது, “ஒரு முறை சூட்டிங்கின் போது கண்ணாடி உடைக்கும் காட்சியில் விஜய்க்கு தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டியது” என கூறியுள்ளார்.

kanal-kannan
kanal-kannan