கணவர் இறந்த ஒரே வருடத்தில் இரண்டாவது திருமணமா.? சர்ச்சைக்கு பதில் அளித்த பிக் பாஸ் பிரபலம்

காதல் சொல்ல வந்தேன் படம் மூலமாக தமிழில் நாயகியாக அறிமுகமானவர் தான் மேக்னா ராஜ். இப்படத்திற்கு பின்னர் தமிழில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிய படங்களில் இவர் நடிக்கவில்லை. தமிழ்மொழி அல்லாமல் மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

ஆக்சன் கிங் அர்ஜுனின் அக்கா மகனான, கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா என்பவரை மேக்னாராஜ் திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு ஜூலை மாதம் எதிர்பாராதவிதமாக சிரஞ்சீவி சார்ஜாவுக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். இது கன்னட திரையுலகினருக்கும், இவரது ரசிகர்களுக்கும், குடும்பத்தாருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சியை தந்துள்ளது.

அச்சூழலில், மேக்னாராஜ் 4 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவரது கணவரின் திரு உருவம் பதிக்கப்பட்ட மிகப்பெரிய கட்டவுட்டின் முன்னிலையில் மேகனா ராஜ்க்கு வளைகாப்பு நடந்துள்ளது. அதனை தொடர்ந்து இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இவர் கணவரே இவருக்கு குழந்தையாக பிறந்தது உள்ளார் என்று பலரும் கூறினர்.

கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 4 டைட்டில் வின்னர் ஆக இருந்தவர் தான் ப்ரீத்தம். இவர் சிரஞ்சீவி சார்ஜாவுக்கு நெருங்கிய நண்பரும் ஆவார். ப்ரீத்தம் குடும்பத்தினரும், மேக்னாராஜ் குடும்பத்தினரும் நல்ல நண்பர்களாவர். தற்போது மேக்னாராஜ், ப்ரீத்தம் அவர்களை மறுமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் கசிந்து காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

megnaraj-son-baby-photo
megnaraj-son-baby-photo

இந்த தகவல் பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்த ப்ரீத்தம் ஒரு செய்தியினுடைய உண்மைத்தன்மையை அறியாமலே, இதுபோன்ற செய்தியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுப்பேன்.

இது சாதாரண, வதந்தியை பரப்பக்கூடிய செய்தி என்று, என்னால் கடந்து போக முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வு கன்னடத் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்