ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஆண்கள் அணியை வச்சு செய்யும் ஜோக்கர்.. டம்மி பீசுனு நினைத்த முத்துக்குமாருக்கு கொடுத்த ஷாக் ட்ரீட்மென்ட்

Bigg Boss Dharsha and Muthukumar: ஒரு வாரத்திற்குள்ளே பிக்பாஸ் வீடு சூடு பிடிக்கும் அளவிற்கு டாஸ்க் குடுத்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இருவரும் மோதிக் கொள்ளும் அளவிற்கு குருநாதர் வச்சு செய்து வருகிறார். அந்த வகையில் ஒருத்தரை ஒருத்தர் மாத்தி மாத்தி கோர்த்து விட்டு கில்லாடி வேலையை பார்க்கிறார். தற்போது இரண்டாவது வாரத்தில் நாமினேஷனை பதிவு பண்ணும் விதமாக ஆண்கள் அணியில் இருந்து பெண்கள் அணியில் இருக்கும் இரண்டு பேரை நாமினேட் செய்ய வேண்டும்.

அதே மாதிரி பெண்கள் அணியில் இருந்து ஆண்கள் அணியில் இருக்கும் போட்டியாளர்களில் இரண்டு பேரை தேர்வு செய்ய வேண்டும் என்று பிக் பாஸ் சொல்லிவிட்டது. அதன்படி இந்த வாரம் 10 போட்டியாளர்கள் நாமினேஷன் லிஸ்டில் தேர்வாகி இருக்கிறார்கள். அதில் போன வரமும் இந்த வாரமும் தொடர்ந்து ஜாக்லின், முத்துக்குமார், சௌந்தர்யா, ரஞ்சித் நாமினேட் ஆகிருக்கிறார்கள்.

தர்ஷாவை துருப்புச் சீட்டாக பயன்படுத்தும் ஜாக்லின்

இதற்கு இடையில் இந்த வாரத்தில் பெண்கள் அணியில் இருந்து ஆண்கள் அணிக்கு தர்ஷா போயிருக்கிறார். அதே மாதிரி ஆண்கள் அணியிலிருந்து பெண்கள் அணிக்கு தீபக் போயிருக்கிறார். ஆனால் தர்ஷா ஒரு ஜோக்கர் கார்டு அதனால் இப்போதைக்கு தர்ஷாவை யாரும் நாமினேட் பண்ண வேண்டாம் என்று முத்துக்குமார் ஒரு கணக்கு போட்டு ஆண்கள் அணியிடம் கூறியிருந்தார்.

அதே மாதிரி தர்ஷவை ஈசியாக நம்மை டைவர்ட் பண்ணி வச்சு செய்யலாம் என்று முத்துக்குமார் பிளான் பண்ணி இருந்தார். ஆனால் தற்போது சமையலுக்கு தேவையான பொருட்களை ஷாப்பிங் பண்ணும் விஷயத்தில் ஆண்கள் அணியில் இருக்கும் பணத்தைவிட அதிகமாக ஷாப்பிங் செய்து விட்டார்கள். அதனால் பிக் பாஸ் எந்த பொருள்களை கொடுக்கிறதோ, அதை வைத்து தான் இந்த வாரம் ஆண்கள் அணி சமையல் செய்து ஓட்ட வேண்டும்.

இதை பிக் பாஸ் அறிவித்த பிறகு தர்ஷா, ஆண்கள் அணியை பார்த்து இதுதான் உங்க பிளானா? உங்களை நம்பி நான் வந்ததுக்கு உங்க கூட சேர்ந்து நானும் சாப்பிடாமல் கஷ்டப்படணுமா? பிளான் A, பிளான் b என்று எத்தனை பிளான் போட்டீர்கள் எல்லாத்தையுமே வேஸ்ட் என்பதற்கு ஏற்ப நீங்கள் அனைவருமே சொதப்பி விட்டீர்கள் என்று ஆண்கள் அணியை வச்சு செய்கிறார்.

இதை தர்ஷாவிடம் இருந்து கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை என்பதற்கு ஏற்ப ஆண்கள் அணி திருட்டு முழி முழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதை பார்த்து குளுகுளுவென்று சந்தோசமாக பெண்கள் அணி ஆர்ப்பாட்டமாக துள்ளுகிறார்கள். இதுதான் ஆரம்பம் இனி போகப்போக இருக்கிறது என்பதற்கு ஏற்ப ஜோக்கராக நினைத்த தர்ஷா ஆண்கள் அணியை வச்சு செய்யப் போகிறார்.

அத்துடன் முத்துக்குமார், டம்மி பீஸ் என்று நினைத்த தர்ஷா ஏன் இப்படி துள்ளுகிறார் என்று மைண்ட் வாய்ஸில் புலம்புகிறார். இதற்கிடையில் ஜாக்கிலின் அவ்வப்போது தர்ஷாவை பார்த்து சில ஐடியாக்களை கொடுத்து ஆண்கள் அணியை தவிக்க வைப்பதற்கு பிளான் பண்ணி வருகிறார். அந்த வகையில் இந்த முறை தர்ஷாவிடம் ஆண்கள் அணி சிக்கிக் கொண்டு தவிக்கப் போகிறார்கள்.

- Advertisement -

Trending News