ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

ஹீரோயின்களுக்கு எதிராக நடத்தப்படும் திட்டமிட்ட கொலை.. ரஜினி பட சூட்டிங்கில் சோபனாவுக்கு ஏற்பட்ட சிக்கல்

நடிகை சோபனா சினிமா துறையில் நடிப்பதையும் தாண்டி சிறந்த பரதநாட்டிய கலைஞர். மற்ற நடிகைகள் உருகி உருகி நடிக்கும் காட்சிகளில் கூட சோபனா கண்ணாலேயே பேசி கவர்ந்து விடுவார். இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சோபனா நடித்த தளபதி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது. குறுகிய காலமே சினிமாவில் இருந்தாலும் அவர் முன்னணி ஹீரோக்கள் அத்தனை பேருடனும் ஜோடி சேர்ந்து நடத்திவிட்டார்.

சோபனா, பழம்பெரும் நடிகை பத்மினியின் நெருங்கிய உறவினர் ஆவார். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் இவர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என தென்னிந்திய மொழிகள் அத்தனையிலும் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மலையாளத்தில் இவர் நடித்த மணிசித்திரதாழ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

Also Read:ரஜினியுடன் நடிக்க கூடாது.. நடிகையை நாடு கடத்திய எம்ஜிஆர்

தற்போது சோபனா சினிமாவில் அவ்வளவு ஆக்டிவாக இல்லை. எப்போதாவது கிடைக்கும் வாய்ப்புகளில் நடித்து வருகிறார். பரதநாட்டிய கலைஞரான இவர் சென்னையில் பரதநாட்டிய பள்ளியை நடத்தி வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகை சுஹாசினி மணிரத்தினத்திடம் தன்னுடைய ஆரம்ப கால சினிமா வாழ்க்கை பற்றி பகிர்ந்து இருந்தார் சோபனா.

எண்பது மற்றும் தொண்ணூறுகளின் காலகட்டத்தில் காதல் பாடல்கள் மற்றும் கவர்ச்சி பாடல்கள் என்றாலே ஹீரோயின்களை மழையில் ஆட விட்டு விடுவார்கள். அந்த சமயத்தில் நிறைய பாடல்கள் இது போன்று வந்திருக்கிறது. ஆனால் இது மாதிரியான காட்சிகள் நடிகைகளுக்கு எதிராக நடத்தப்படும் திட்டமிட்ட கொலை என்று சொல்லி இருக்கிறார் சோபனா . இது குறித்த தன்னுடைய கசப்பான அனுபவத்தையும் பகிர்ந்திருக்கிறார்.

Also Read:வெறி பிடித்து களத்தில் காத்திருக்கும் ரஜினி.. பின்னணியில் இருக்கும் 3 முக்கிய காரணங்கள்

1989இல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் சோபனா நடித்த திரைப்படம் சிவா. இந்த படத்தில் ‘இரு விழியின் வழியே நீயா வந்து போனது’ என்ற ஒரு பாடல் இருக்கும். அந்த படப்பிடிப்பின் போது எந்தவித முன் அறிவிப்பும் இன்றி ஒரு டிரான்ஸ்பரன்ட் சேலையை கொண்டு வந்து சோபனாவிடம் அடுத்த பத்து நிமிடத்தில் பாடல் காட்சி எடுக்கப்படும் என்று சொல்லிவிட்டார்களாம். அவர் அந்த சேலையை பார்த்தே இது மழையில் எடுக்கப்படும் பாடல் ஆகத்தான் இருக்கும் என்று நினைத்திருக்கிறார்.

கைவசம் வேறு எந்த துணியும் அவரிடம் இல்லை, மேலும் 10 நிமிடத்திற்குள் படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும். இதனால் சோபனா அங்கிருந்த மேஜையில் போடப்பட்டிருந்த பிளாஸ்டிக்க கவரை எடுத்து உள்ளே கட்டிக்கொண்டு அதற்கு மேலே புடவை கட்டினாராம். இந்த சம்பவத்தை பல வருடங்கள் கழித்து இந்த பேட்டியில் சொல்லி இருக்கிறார் சோபனா.

Also Read:நடிகையுடன் ரகசிய திருமணம்.. இரவோடு இரவாக ரஜினியை கடத்தி செய்த விசாரணை

- Advertisement -

Trending News