கதிரவனால் மனம் உடைந்த ஷிவின்.. எரிகிற நெருப்பில் எண்ணெயை ஊற்றும் அமுதவாணன்

பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கிட்டத்தட்ட 80 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மற்ற சீசன்களை ஒப்பிடும்போது இந்த சீசன் சற்றும் அந்தமாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் பிக் பாஸ் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.

ஆகையால் இந்த வாரம் குடும்பங்கள் டாஸ்க் வைக்கப்பட்டது. பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளரின் உறவினர்கள் வருகை தந்தார்கள். அந்த வகையில் அமுதவாணன், ரக்ஷிதா, அசீம், விக்ரமன் போன்ற போட்டியாளர்களின் குடும்பங்கள் மற்றும் உறவினர்கள் ஆகியோர் வருகை தந்தனர்.

Also Read : யாரும் எதிர்பார்க்காத பிக் பாஸ் வைல்ட் கார்டு என்ட்ரி.. டிஆர்பியை தக்க வைக்க மாஸ்டர் பிளான்

இந்நிலையில் கதிரவனின் பெற்றோர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தனர். கதிரவன் அம்மா வந்த உடனே ஷிவனை தனது மகள் போல் என்று அவர் கூறினார். இதுவே பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனென்றால் சிவினுக்கு கதிரவன் மீது ஒரு கிரஷ் உள்ளது. இது பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைவருக்குமே தெரிந்த ஒன்றுதான்.

ஆனால் இதற்கு கதிரவன் எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் இருந்தார். இப்போது யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கதிரவனின் காதலியான சினேகா திடீரென என்ட்ரி கொடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த சிவின் தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருந்தார்.

Also Read : கேமராவை மறந்து பைனலிஸ்ட், வின்னர் யாருனு அப்பட்டமாக கூறிய மைனா.. பதறிப்போன பிக் பாஸ்

இதில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அமுதவாணன் மேலும் சிவனை உசுப்பேத்திக் கொண்டிருக்கிறார். சாதாரணமாக இருந்தால் கூட அவர் சிறிது நேரம் அழிந்துவிட்ட அதை மறந்து விடுவார். ஆனால் பாட்டு பாடி மேலும் அவரை எரிச்சல் அடைய செய்து வருகிறார்.

இதனால் அமுதவாணன் மீது ரசிகர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. மேலும் விக்ரமன் கூறுகையில் கதிரவன் இதை முன்கூட்டியே சொல்லி இருக்க வேண்டும், தேவையில்லாமல் ஒருவரின் ஆசையில் விளையாடுவது தவறு என்று கூறியிருந்தார்.

Also Read : 9 இடங்களும் ஷிவினுக்கு தகுதி இல்லை.. ஒரே டாஸ்கால் கொழுந்துவிட்டு எரியும் பிக் பாஸ் வீடு