பிக் பாஸுக்கு பிறகு புகைப்படத்தை வெளியிட்ட சிவானி.. வளைத்துக் கட்டி லைக் போடும் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சிவானி. பின்பு கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நான்காவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

அதே பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்ற பாலாஜி முருகதாஸ் உடன் சிவானி இணைத்து இருவரும் காதல் செய்து வருவதாக கூறி வந்தனர். ஆனால் இருவரும் இதனை முற்றிலுமாக மறுத்தனர்.

பல ரசிகர்கள் சிவானி எப்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்த்து காத்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே சிவானி பிக்பாஸ் வீட்டில் 98 நாட்கள் இருந்து சமீபத்தில் வெளியானார்.

தற்போது ரசிகர்கள் எதிர்பார்த்தபடியே சிவானி அவரது சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து அடுக்கடுக்காக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

shivani narayanan
shivani narayanan

முன்பெல்லாம் சிவானி அரைகுறை உடையுடன் படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். ஆனால் எப்ப பிக் பாஸ் சென்று வந்தாரோ அன்றிலிருந்தே சாதாரண புகைப்படத்தை மட்டுமே வெளியிட்டு வருகிறார்.

shivani-narayanan
shivani-narayanan

தற்போது சிவானி சிவப்பு உடை போட்ட புகைப்படத்தை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒருவேளை பிக்பாஸ் காதலர் சொன்னதால எண்ணமோ நம்ம சிவானி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடாமல் இருக்கிறாரோ என கிசுகிசுத்து வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்