தாலி கட்டாமலே 30 வயது நடிகருக்கு மனைவியாக வாழும் பிக்பாஸ் ஷிவானி.. சீக்ரெட் கிடைத்த பிரபலம்

முன்னதாக 19 வயதான சிவானி தன்னுடன் சீரியலில் நடித்த நடிகர் ஒருவருடன் நீண்ட நாட்களாக கள்ள உறவில் இருந்து வந்த செய்தி அனைவரையும் அதிர்ச்சி ஆக்கியது. ஆனால் இது உண்மையில்லை என பலரும் நினைத்துக் கொண்டிருந்தனர். சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முதலில் ரசிகர்களின் பொறுமையை சோதித்த ஷிவானி நாராயணன் இறுதிகட்டத்தில் அதே ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வெளியேறினார்.

சீசனுக்கு சீசன் விஜய் டிவி ஒரு காதல் ஜோடியாவது சேர்த்து வைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை ஓட்டி விடுவார்கள். அந்த வகையில் கடந்த சீசனில் மாட்டியது சிவானி தான். உடன் போட்டியாளராக வந்த பாலாஜி முருகதாஸ் என்பவரை காதலிக்கும்படி இவரது கதாபாத்திரம் அமைந்தது.

வழக்கம்போல் விஜய் டிவி முதலில் காதலை கிளப்பி விட்டு பின்னர் பெற்றோரை உள்ளே அனுப்பி காதலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது. இது ஒருபுறமிருக்க அதே பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஷிவானியின் கள்ளக்காதலர் அசீம் என்பவர் கலந்துகொள்ள இருந்த நிலையில், திடீரென பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகினார் அசீம்.

அசீம் என்பவர் சிவானியுடன் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் போன்ற சீரியல்களில் நடித்தார். அப்போது இருவருக்குள்ளும் காதல் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். அந்த சீரியல்களில் நடிக்கும் போது ஷிவானிக்கு ஒரு பதினேழு பதினெட்டு வயது இருக்கும்.

அசீம் என்பவருக்கு தற்போது 30 வயது ஆன நிலையில் சமீபத்தில் சிவானி உடனான காதல் பிரச்சினை காரணமாக அவரது மனைவி அவரை விவாகரத்து செய்து கொண்டாராம். இந்நிலையில் மீண்டும் அசீம் மற்றும் சிவானி கூட்டணியில் விஜய் டிவி ஒரு புதிய சீரியலை தொடங்க உள்ளதாம்.

shivaninarayanan-azeem-cinemapettai
shivaninarayanan-azeem-cinemapettai

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் தன்னுடைய யூடியூப் பக்கத்தில் ஷிவானி தாலி கட்டாமலேயே அசீம் என்பவருக்கு மனைவியாக வாழ்ந்து வருகிறார் என குண்டை தூக்கி போட்டார். இது உண்மையா அல்லது பொய்யா என்பதை ஷிவானி அல்லது அசீம் இருவரில் யாரேனும் ஒருவர் இதுபற்றி உண்மையை கூறாத வரையில் இந்த சர்ச்சையை நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கும் என்பது மட்டும் உறுதி.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்