விஜய் சேதுபதியோடு நடிச்சும் பிரயோஜனம் இல்லை.. அந்த மாதிரி கேரக்டர்களால் சினிமாவை வெறுக்கும் ஷிவானி

ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தாலும் சோசியல் மீடியா மூலம் அதிக பிரபலமானவர் தான் ஷிவானி. தொடர்ச்சியாக கிளாமர் போட்டோக்களை இறக்கி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட இவருக்கு அதன் மூலமே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

குட்டி குட்டி உடையை அணிந்து கொண்டு பொம்மை போல் பிக்பாஸ் வீட்டை சுற்றி வந்த அவர் அங்கும் ஒரு பார்வையாளராகவே இருந்தார். இது சில விமர்சனங்களை ஏற்படுத்தி இருந்தாலும் உலகநாயகன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

Also read: போகும் இடமெல்லாம் அந்த மாதிரி பட வாய்ப்பு கேட்கும் ஜெய்.. விஜய் சேதுபதி மாதிரி ஆசைப்பட்டா எப்படி ப்ரோ!

ஆனால் படத்தை பார்த்தால் மூன்று மனைவிகளில் ஒருவராக இருக்கும் இடம் தெரியாமல் வந்து போனார் ஷிவானி. அதைத்தொடர்ந்து ஒரு சில படங்களில் தலையை காட்டிய இவர் இப்போது சினிமா என்றாலே தெறித்து ஓடுகிறாராம். ஏனென்றால் அம்மணியை தேடி வரும் வாய்ப்புகள் எல்லாம் அந்த மாதிரி ஐட்டம் கேரக்டர்களாக இருக்கிறதாம்.

அதுவும் இல்லை என்றால் கூட்டத்தோடு கூட்டமாய் வந்து செல்லும் கதாபாத்திரங்கள் தான் தேடி வருகிறதாம். இதனால் எந்த தயாரிப்பாளர் போன் செய்தாலும் இவர் எடுப்பதே கிடையாதாம். அதனாலேயே இப்போது இவருக்கு வாய்ப்புகள் வருவது சுத்தமாக குறைய தொடங்கி விட்டது. மேலும் போன் காலை கூட அட்டென்ட் பண்ணாமல் இருக்கும் இவரை வைத்து படம் எடுக்க யாரும் தயாராக இல்லை.

Also read: முளைக்கும் முன் பறக்க ஆசைப்படும் ஜெய் பீம் மணி.. விஜய் சேதுபதியை வைத்து கோடிகளுக்கு குறிவைக்கும் குறட்டை தம்பி

ஆனால் ஷிவானி இதைப் பற்றி எல்லாம் கவலைப்படுவது கிடையாது. ஏனென்றால் கடை திறப்பு விழா, விளம்பர நிகழ்ச்சி, ஈவன்ட் போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் இவர் லட்ச கணக்கில் சம்பாதித்து வருகிறார். அங்கு இவருக்கான மரியாதை கிடைப்பதோடு ஒரு நாளைக்கு 20 லட்சம் வரை கல்லா கட்ட முடிகிறதாம்.

அதனாலேயே இது போன்ற நிகழ்ச்சிகள் தொடர்பாக யாராவது போன் செய்தால் அவர் உடனே அட்டென்ட் செய்து தேதிகளை கொடுத்து விடுகிறாராம். இப்படி எதிர்பார்த்ததற்கு மேலாகவே சம்பாதிக்கும் இவர் எதற்காக சினிமாவில் கஷ்டப்பட்டு நடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Also read: விஜய் சேதுபதிக்கு காலை வாரிவிட்ட 5 படங்கள்.. 2 மணி நேரமா மண்டையை சொரிய வைத்த மக்கள் செல்வன்

Sharing Is Caring:

அதிகம் படித்தவை