சிவாஜி அடுத்த தலைமுறை நடிகர்களை தூக்கி நிறுத்தி 5 படங்கள்.. அதிகபட்சமாக ஒரு கோடி வரை சம்பளம் கொடுத்த நடிகர்

Actor Sivaji Ganeshan: தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்  சிவாஜி கணேசன். இவருடைய தத்துரூபமான நடிப்பும், கம்பீரமான குரலும் ரசிகர்களை எப்பொழுதுமே பிரமிப்பில் ஆழ்த்தும். இவருடைய நடிப்பை பார்த்து தான் பல முன்னணி ஹீரோக்கள் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட இவர் மூன்று தலைமுறை நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். அது என்னென்ன படங்கள் என்பதை பார்க்கலாம்.

விஜய்: 1997 ஆம் ஆண்டு எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ஒன்ஸ்மோர் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவாஜி, விஜய், சிம்ரன், சரோஜாதேவி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் விஜய்க்கு அப்பாவாக நடித்து இவருடைய சொத்தை மீட்டுக் கொடுக்கும் கேரக்டரில் நடித்திருப்பார். இப்படத்தில் சிவாஜியின் நடிப்பு ஒரு வாலிப இளைஞர் எப்படி துறுதுறுப்பாக இருப்பாரோ அதைப்போல் ரசிக்கும் படியாக இவருடைய நடிப்பு அனைவரையும் கவர்ந்திருக்கும்.

Also read: எதிர்நீச்சல் சீரியலை பற்றி குணசேகரனிடம் பேசிய ரஜினிகாந்த்.. ஜெயிலர் படப்பிடிப்பில் நடந்த சம்பவம்

கமல்: இயக்குனர் பரதன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு தேவர்மகன் திரைப்படம் வெளிவந்தது இதில் சிவாஜி, கமலஹாசன், ரேவதி, கௌதமி, நாசர் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் கமலுக்கு அப்பாவாக சிவாஜி நடித்திருப்பார். இதில் ஊர் தலைவராகவும், அந்த மக்களுக்காக எதையும் செய்யக்கூடிய கேரக்டரில் எதார்த்தமாக நடித்திருப்பார். இப்படம் வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்று 175 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது.

பிரபு: பாரதிராஜா இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு பசும்பொன் திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவாஜி, பிரபு, ராதிகா, சிவகுமார் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் ராதிகாவுக்கு அப்பாவாக சிவாஜி நடித்திருப்பார். இதில் கல்யாணம் ஆன சில காலங்களில் கணவனை இழந்த தன் மகளுக்கு மறுதிருமணம் செய்து வைக்கும் ஒரு பாசக்கார தந்தையாக இவருடைய நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இப்படத்திற்காக சிவாஜி சம்பளமே வாங்காமல் நடித்திருக்கிறார்.

Also read: கமல் மெனக்கெட்டு போன் பண்ணி கூப்பிட்டும் வர மறுத்த நடிகர்.. பிக் பாஸ் உங்களுக்கு காசு எனக்கு தூசு!

ரஜினிகாந்த்: கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு படையப்பா திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவாஜி, ரஜினி, சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தில் ரஜினிக்கு, சிவாஜி அப்பாவாக நடித்திருப்பார். இந்த படம் தான் சிவாஜி நடித்த கடைசி படம். இப்படத்தில் சிவாஜி ஊரைக் கட்டிக் காக்கும் தலைவராக இவருடைய எதார்த்தமான நடிப்பை மிகச் சிறப்பாக கொடுத்து இருப்பார். இப்படத்தில் சிவாஜி கணேசன் நடிப்புக்காக வாங்கிய சம்பளம் ஒரு கோடி. இதுதான் அவர் வாங்கிய அதிகபட்ச சம்பளம்.

சத்யராஜ்: இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் 1987 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு திரைப்படம் வெளிவந்தது. இதில் சிவாஜி, சத்யராஜ், ராதா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படத்தில் சிவாஜி நீதிபதியாக நடித்திருப்பார். சந்தர்ப்ப சூழ்நிலையால் சத்யராஜ் தண்டனை அனுபவித்து வருவார். இவரை காப்பாற்றும் பொறுப்பில் சிவாஜி அவருடைய நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்.

Also read: விஜய்யை போலவே அசிங்கப்பட்ட நடிகர்.. வழுக்கைத் தலை, கேவலமான மீசை என அடியோடு வெறுக்கப்பட்ட ஹீரோ

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்