ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

என் மானத்தை வாங்கிய மீடியாவுக்கு தரமான பதிலடி கொடுப்பேன்.. மீடியாக்கள் மீது வழக்கு போட்ட பொம்மை நடிகை.

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்தரா என்பவர் ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்திராவின் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.

ஷில்பா ஷெட்டி ராஜ் குந்த்ராவை கடந்த 2009 ஆம் திருமணம் செய்தார். இந்த நிலையில், பிஎம்எல்ஏ 2002 சட்டத்தின் படி, இவர்கள் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை செய்த்தாக வழக்கு தொடுக்கப்பட்டு கேஸ் நடந்தது. மேலும் 97 கோடி மதிப்புள்ள, இவர்களின் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டன.

சொத்துக்கள் முடக்கப்பட்டதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அந்த வழக்கு ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவருக்கு சாதகமாக வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து மீடியாக்களில் பரவிய செய்திகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு ஒன்றை இந்த தம்பதிகள் தொடுத்துள்ளார்கள்.

யாரையும் சும்மா விடமாட்டேன்.

இது தொடர்பாக ராஜ் குந்த்ரா வெளியிட்டுள்ள அறிக்கையில், “என்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அவையெல்லாம் நீக்குமாறு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், கால அவகாசம் கொடுத்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.”

“நான் விசாரணைகளில் இருக்கிறேன், என்னை குற்றவாளியாக காட்டுவது தவறானது. செய்திகளை மட்டும் வெளியிடுங்கள். நீங்களாக தீர்ப்பையும் எழுதி போடாதீர்கள் என்று பல முறை அறிவுறுத்தினேன். ஆனால் எந்த மீடியாவும் அதை பொருட்படுத்தவில்லை. இது எனக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது. அதனால் தான் தற்போது வழக்கு தொடர்ந்துள்ளேன்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Trending News