இளம் பெண்களை வைத்து ஆபாச படம்.. வசமாக சிக்கிய பிரபுதேவா பட நடிகையின் கணவர்

பிரபுதேவா படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகையின் கணவர் பணத்திற்காக இளம்பெண்களை வைத்து ஆபாசப் படங்கள் எடுத்து வெளியிட்டு வந்ததை அறிந்த போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் 1996 ஆம் ஆண்டு பிரபுதேவா நடிப்பில் வெளியான திரைப்படம் மிஸ்டர் ரோமியோ. இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி நடித்திருந்தார். பாலிவுட்டின் முன்னணி நடிகையான இவருக்கு தமிழில் முதல் படம் இதுதான்.

அதன் பிறகு விஜய் நடித்த குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். அதுமட்டுமில்லாமல் இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் உரிமையாளராகவும் உள்ளவர் ஷில்பா ஷெட்டி.

இவ்வளவு மரியாதையுடன் இருக்கும் இந்த நடிகைக்கு இப்படி ஒரு கணவரா என அதிர்ச்சியளிக்கும் அளவுக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புக்காக அலைந்து கொண்டிருக்கும் பெண்களை வைத்து ஆபாச படம் எடுத்து பணம் சம்பாதித்து வந்துள்ளார் ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்தரா.

முதலில் இவருடன் இருந்த பணியாளர் தான் கைது செய்யப்பட்டார். அவரை மிரட்டி விசாரித்ததில் ஷில்பா ஷெட்டியின் கணவர் தான் இதற்கு முதலாளி என போட்டுக் கொடுத்து விட்டாராம். இதன் காரணமாக இரவோடு இரவாக மும்பை போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.

இதனால் வெளியில் தலைகாட்ட முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார் ஷில்பா ஷெட்டி. மேலும் அவருக்கும் இதில் ஏதேனும் தொடர்புள்ளதா என்பது போல அவரது கணவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறதாம். மேலும் பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்களா என்பது போன்ற தவறான பிம்பம் ஷில்பா ஷெட்டியின் குடும்பத்தின்மீது ஏற்பட்டுள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.

shilpa-shetty-raj-kundra-cinemapettai
shilpa-shetty-raj-kundra-cinemapettai
- Advertisement -