பப்லுவை பிரிய இதுதான் காரணம்.. உருக்கமாக ஷீத்தல் இன்ஸ்டாவில் வெளியிட்ட போஸ்ட்

Babloo Prithiviraj : கடந்த வருடம் மிகவும் பேசுபொருளானது ரவீந்தர்-மகாலட்சுமி மற்றும் பப்லு- ஷீத்தல் திருமணம் தான். வெள்ளிதுறையில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய பப்லு சின்னத்திரை தொடர்களிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

இந்நிலையில் இவருக்கும் பீனா என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு 25 வயது மகன் உள்ள நிலையில், அவருக்கு ஆட்டிசம் ஏற்பட்டிருக்கிறது. இந்நிலையில் பீனா மற்றும் பப்லு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதை அடுத்து அவர்களுக்கு விவாகரத்தும் நடந்த நிலையில் பப்லுவின் அரவணைப்பில் அவரது மகன் வளர்ந்து வந்தார். இந்த சூழலில் மலேசியா பெண்ணான 23 வயது உடைய ஷீத்தல் என்பவரருடன் பப்லு நெருக்கமாக இருந்து வந்தார்.

56 வயது நிரம்பிய பப்லு தனது மகள் வயது உடையவருடன் திருமணம் செய்து கொள்ளும் செய்தி அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து சமூக வலைதளங்களில் ஷீத்தல், பப்லு இருவரும் இணைந்து கேக் செய்யும் வீடியோ என ரீல்ஸ் வெளியிட்டு வந்தனர்.

இன்ஸ்டாவில் புகைப்படத்தை நீக்கிய ஷீத்தல்

சமீபத்தில் ஷீத்தல் தனது இன்ஸ்டா பக்கத்தில் பப்லுவுடன் வெளியிட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தையும் டெலிட் செய்து விட்டார். இதனால் இவர்கள் இருவரும் பிரிந்து விட்டதாக செய்திகள் வெளியானது.

இதை பப்லுவும் ஒரு பேட்டியில் ஒற்றுக்கொண்ட நிலையில் அதற்கான காரணம் வெளியாகாமல் இருந்தது. இந்த செய்தி பூதாகாரம் எடுக்க ஷீத்தல் உருக்கமாக இன்ஸ்டா போஸ்ட் ஒன்று வெளியிட்டு இருந்தார்.

அதாவது தானும், பிரித்வியும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் தான் இருந்து வந்தோம். நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளவில்லை. மேலும் நாங்கள் நினைத்தபடி இந்த வாழ்க்கை இல்லாததால் பிரிந்து விட்டோம்.

இந்த கஷ்டமான சூழ்நிலையையும் கடந்து செல்ல வேண்டி இருக்கிறது. மேலும் எங்களுடைய இந்த முடிவுக்கு மதிப்பாளிப்பீர்கள் என்று நம்புவதாக ஷீத்தல் பதிவிட்டு இருக்கிறார்.

ஷீத்தல் இன்ஸ்டா போஸ்ட்

sheetal
sheetal insta post
Sharing Is Caring:

அதிகம் படித்தவை